இருக்கிறார் அந்தக் கவிஞர். மற்றொரு சமயம் என்னைச் [முல்லை முத்தையா] சந்தித்த அந்தக் கவிஞர், 'நான் நன்றாகக் கவிதை எழுதுகிறேனாம்; அதனால் நான் திருநெல்வேலியாகத்தான் இருக்க வேண்டும், எனக் கருதி, டி. கே. சி. என்னிடம், திருநெல்வேலியா? என்றார். நான் மதுரை என்றதும் அவர் வாயடைத்து விட்டார் என்றார்.
புதுமைப்பித்தனிடம் உரையாடிக் கொண்டிக்கும் போது மேற்கண்ட நிகழ்ச்சியை அப்படியே சொன்னேன். அதற்கு, “அது அல்ல விஷயம், இவ்வளவு மட்டரகமான கவிதைகள் எழுதும் நீ-மனதுக்குள் எண்ணிக்கொண்டு திருநெல்வேலியா? என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார். இல்லை, மதுரை என்று அவர் சொன்னதும் தான் எண்ணியது சரிதான் என்று டி.கே.சி. தீர்மானித்துக் கொண்டார். இவ்வளவுதான் விஷயம்” என்றார்.
ஒரு பதிப்பாளர் புதுமைப்பித்தனிடம் இரண்டு மூன்று முறை வந்தார். அவருக்குத் தருவதாகச் சொன்ன விஷயம் எழுதப்படாமலே கடத்தி வந்தார். அந்தப் பதிப்பாளர். நல்ல ஏர்கண்டிஷன் ரூமிலே, ஒரு சொம்புத் தண்ணீர், வெற்றிலை, சீவல், புகையிலை இவைகளுடன் உங்களை வைத்துப் பூட்டிவிட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் அழகாக எழுதி வைத்திருப்பீர்கள்” என்றார். அதற்குப் புதுமைப் பித்தன், ‘அதுதான் இல்லை நீ ஏமாந்து
19