பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.பி. ரகுநாதன் -23 வெளியிட்ட நவயுகப் பிரசுராலயத்தின் பதிப்பாசிரியரான ப.ரா.என்ற ப.ராமஸ்வாமி,புதுமைப்பித்தனுக்குத் தெரிவிக்காமலே தேசிகனிடமிருந்து எழுதி வாங்கி வெளியிட்ட. முன்னுரையேயாகும். இந்த முன்னுரையிலுள்ள மேற்கூறிய விஷம்த்தனங்களை முதன் முதலில் இனம் கண்டு கொண்டவரே புதுமைப்பித்தன், தான். எனவேதான் நான் 45 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வெளியிட்ட 'புதுமைப்பித்தன் வரலாறு' என்ற நூலில், 'அந்த (தேசிகனின்) முன்னுரையை எல்லோரும் ரசித்துப் படித்தார்கள். ஆனால் முன்னுரையை விரும்பாத, பாராட்டாத ஒரே ஆசாமி-புதுமைப்பித்தன் ஒருவர்தான்' (முதற்பதிப்பு 1951.பக்.190) என்று எழுதியிருந்தேன். புதுமைப்பித்தனின் 'நிசமும் நினைப்பும்' என்ற கதை நினைவிருக்கிறதா? அந்தக் கதையில் வி.பி. என்ற எழுத்தாளருக்கும், ராமபத்மா புத்தகப் பிரசுராலயத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் இடையே நடைபெறும் பின்வரும் உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. ராமலிங்கம்: 'நீ. போன மாசம் எழுதினியே அந்தக்கதை. அதைப்பத்தி புரொபஸர் சிதம்பரலிங்கம்' என்ன சொன்னார் தெரியுமா? லோகத்திலேயே அந்த மாதிரிக் கதை என்று பொறுக்கி எடுத்தால், பத்துக்கூடத் தேறாதாம். அவ்வளவு உயர்வாம். தமிழுக்கு யோகம்னு தலைகால் தெரியாமே கூத்தாடினார்.' - வி.பி. 'அந்தச் சிதம்பரலிங்கம், அதான் இங்கிலீஷ் புரொபஸர், அவன்தானே? அவன் மகா கண்டுட்டானாக்கும். எல்லாரைப். பத்தியும் அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பான். நீ அவனிடம் முகவுரை கேட்டுக் காவடி எடுத்தியா? எவண்டா வாரான்னு கொக்கு மாதிரி உக்காந்திருக்கிற கிழட்டுப் பொணத்துக்கு பின்னாலே நின்று காக்கா புடிச்சா இது மட்டுமா சொல்லுவான்? இன்னும் சொல்லுவான். அவனுக்குத் தமிழைப் பத்தி என்ன தெரியும்? இங்கிலீஷைப் பத்தித்தான் என்ன தெரியும்? அவனுடைய இங்கிலீஷ் இலக்கியம் போன தலைமுறை இங்கிலீஷ்காரனுடன் போச்சே. பாடப்புஸ்தக வாத்தியாருக்கு...... ராமலிங்கம் 'ஏன் ஸார் வி.பி. அவரை ஏன் இப்படித் திட்டுகிறீர்? அவர் உம்மைப் புகழத்தானே செய்தாராம்.' வி.பி. : 'என்னைப்புகழ அவன் யார்? அவனுடைய வறட்டு இங்கிலீஷூம், விதரனை இல்லாத தமிழும்.......'