பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் - - - 'புதுமைப்பித்தன் கதைகளாக இன்று அறியவரும் கதைகளில் சில தழுவல் கதைகளும் கலந்து விட்டிருக்கின்றன. இக்கதைகள் சுக்கிராச்சாரி என்ற புனைப்பெயரில் 'ஜோதி' பத்திரிகையில் எழுதப்பட்டவை என சி.சு.செல்லப்பா குறிப்பிடுகிறார்.' - - மேற்கண்டவாறு, எழுதும்போது செல்லப்பா இக்கருத்தை எதிலாவது எழுதியிருந்தாரா அல்லது தம்மிடம் நேரில் கூறினாரா என்ற தகவலைத் தெரிவிக்காமல், 'ஆனால் கள ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் - இதற்கு முரணாக உள்ளன' என்று எழுதிவிட்டு, 'ஜோதி' பத்திரிகையில் வெளிவந்த புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றித் தமது கள ஆய்வின் மூலம் தெரியவந்த தகவல்கள் சிலவற்றைத் தெரிவித்த பின் கூடுதலாக ஒரு தகவலைப் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்: '1952 சிங்கைத் தமிழ் முரசில் கந்தசாமி வாத்தியார் 'விபரீத ஆசை' ஆபாசமானதா என்ற தலைப்பில் தரும் தகவல் குறிப்பிடத்தக்கது. 'விபரீத ஆசை' முதலான சில கதைகளை ஜோதிக்கு எழுத ஒப்புக்கொண்டு சர்மாவிடம் முன்பணமாகப் பெற்றிருந்தார். நேர்மைக்கார சர்மா கதைகளில் சிலவற்றை வெளியிட்ட பிறகு அதன் ஆபாச நாற்றம் தாளாமல் நிறுத்தினார்.' இவ்வாறு எழுதியபின் வேதசகாய குமார் மேற்கொண்டு பின்வருமாறு எழுதியுள்ளார். 'விபரீத ஆசை' தழுவல் கதை. ஆனால் முதல் நான்கு கதைகளுக்கும் ஐந்தாவது கதையான 'விபரீத ஆசை'க்குமான இடை வெளியை நோக்கும்போது, முன்பணம் பெற்றுவிட்ட நிலையில், படைப்பு மனமின்றி, ஆனால் கதை தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தொடக்க காலத்தில் எழுதி வைத்திருந்த தழுவல் கதையை அனுப்பியிருக்க வேண்டும். அல்லது நான்காவது கதையான 'அபிநவ ஸ்நாப்' கதையின் சில வரிகளைச் சாமிநாத சர்மா ஆபாச நாற்றம் கொண்டதாகக் கருதி எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்புணர்வாக முழுமையும் பாலுணர்வுச் சிக்கலை அனுபவத்தளமாகக் கொண்ட 'விபரீத ஆசை'யை ஐரோப்பிய சிறுகதையைத் தழுவி எழுதி அனுப்பியிருக்கலாம்', - மேற்கண்ட பகுதியில் எடுத்த எடுப்பில் ‘விபரீத ஆசை' தழுவல் கதை என்று உறதியாகக் கூறிவிட்டு, இறுதிவரியில் அக்கதை ஐரோப்பியச் சிறுகதையைத் தழுவி எழுதியதாக இருக்கலாம் என்று சந்தேகாஸ்பதமாக லேதசகாய குமார் ஏன் எழுதினார் என்று