வயசுப் பையனும் அவளுந்தான். அவளை இங்கே கூட்டி வச்சுக்கோ. வீட்டையும் பாத்துக்குவா - புள்ளையெயும் பாத்துக்குவா -என்ன சொல்லுறே சம்மதமா?"
"நீங்க சொன்னாச் சரிதான், இல்லேங்கப் போறனா நான்" என்கிறாள்.
"நான் இண்ணெக்கே புறப்படுறேன்; புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போரேன்; அங்கெல்லாரும் பார்க்க ஆசைப்படுறாக" என்கிறார் கிழவர்.
இரவு ரயில்வே ஸ்டேஷன்.
இரண்டாவது வகுப்பு வண்டியில் கிழவனாரும் குஞ்சுவும் உட்கார்ந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் சுந்தரவடிவேலுவும் மரகதமும் நிற்கிறார்கள்.
ரயில் ஊதிவிட்டது; புறப்படப் போகிறது.
"ஊருக்குப் போறியாக்கும்" எனக் குழந்தையை ஜன்னல் வழியாக முத்தமிடுகிறார்.
ரயில் நகருகிறது.
"ஏட்டி,போயிட்டு வாறியா?" என்கிறாள் மரகதம்.
"ஒன்கூட டூ. ஆனமேலே, அம்பாரி மேலே டு " என ஜன்னல் வழியாகக் கையை நீட்டிக்கொண்டு கத்துகிறது குழந்தை. கிழவனார் அதன் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.
திருமணம்
ஒரு கலியாண வீடு; அதாவது கலியாண வீட்டின் முன் முகப்பு. சட்டத்தால் வாரிசுகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று சட்டத்தையும் பொதுஜன அபிப்பிராயத்தையும் ஒருங்கே திருப்தி செய்விக்கும் நோக்கத்துடன் நடப்பதுபோல அவ்வளவு படாடோபமற்ற அலங்காரம்.
வாசலில் தெருவுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பூவரச மரம். நாலைந்து பேர்கள் கலியாண 'மஜா'வில் கும்மாளமடித்து நிற்கிறார்கள். அவர்களுள் ஒரு சிறுவன்; ஒற்றைநாடியான சரீரம்; தீட்சண்யமான கண்கள் எண்ணை கொஞ்சம் வழியவிட்டுச் சீவிய கிராப்புத் தலை. இடையில் பட்டு வேஷ்டி; பட்டு ஷர்ட்; இடுப்பில் பட்டுக்கரை மேல்வேஷ்டியைப் பிரிமணையாகச் சுற்றிக் கட்டியிருக்கிறான். வெற்றிலை அளவுக்கு மிஞ்சிப் போட்டதால், வாயும் ஷர்ட்டும் சிகப்புக் கறையுடன் காணப்படுகிறது. வாய் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுவர்கள் கும்பல் சும்மா நிற்கவில்லை. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு பையன் வாழை மட்டை ஒன்றை வைத்துக்கொண்டு பக்கத்தில் யாரும் கவனிக்காமல் பராக்காக இருக்கும் சமயத்தில் பின்பக்கமாகப்
718
சிற்றன்னை