பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பமும் குழந்தையும் 133 தெரியவில்லை இன்றும் தெரியவில்லை என்று கமலாம் பாள் கூறுகிறாள். உள்ள 1ல் கமலாம்பாள் மிகவும் மனம் நொந்து தான் போனாள். அவருடன் வாழ்ந்த நாளிலும் அ 2 ரூக்கு இன்பம் இல்லை; அவர் மறைந்த பிறகும் தன்பமே மிஞ்சி திற்கிறது . * * நான் பிறந்த வீடும் புகுந்த வீடும் நல்ல இடம் கள்; செய லுள்ள குடு *பங்கள். எனினும்' எனக் கும் அவருக்கும் வாழ்நாள் முழுதும் கிடைத்த:ை2 . ஏமாற்றம், தோல்வி, துன்பம் இவைதான்:.... என்று சொல்கிறாள். கமலாம்பாள். கஷ்டங்களை அனுபவிக்கப் பிறந்தவளைப் போலவே வளர்ந்த கமலாம்பாளும், அன்பையே காணாத காரணத் தால் வீட்டை விட்டு வெளியேறிய புதுமைப்பித்தனும் வாழ்க்கையை நாடிச் சென்னைக்கு வந்தனர். மற்ற கதை தான் உங்களுக்குத் தெரியுமே! புதுமைப்பித்தனது 'சித்தி' என்ற சிறு . கதையில் மனை வியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் புது மைப்பித்தன்: , * *...சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்து கொள் கிறான் என்பதைப் பரிபூரணமாகத் தெரிந்து கொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய.. ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம் மதித்துக்கொண்ட ஜீவனுக்குத்தான் அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில் எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் , பரிபூரணமாகத் தெரிந்து கொள்ளச் சௌகரி யம் உண்டு. 'விவேகிகள் தெரிந்து கொள்வார்கள். ' அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல், பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் கனவுலகில் பெற்றிருக்க முடியும். இந்தக் '- சூத்திரத்தின்படி பார்த்தாலும், புதுமைப்பித்த னது குடும்ப வாழ்க்கை 'எந்தக் கதியில் எந்த நியதியில்” சென்றது என்பதை அறிவிக்கக்கூடிய ஜீவன் கமலாம்பாள் ஒருத்திதான், ஆனால் கமலாம்பாளோ “ நான் அவரைப் புரிந்து கொள்ள வேமுடியவில்லை' என்று கையை விரிக்கும்