பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 புதுமைப்பித்தன் போது, என்னைப் போன்ற நண்பன் - அதிலும், புதுமைப் பித்தன் சம்சார பந்தத்தோடு இல்லறம் நடத்திய காலத் தில் அதிகமாக அவரோடு பழகும் வாய்ப்புப் பெறாத நண் பன் - அந்த நியதியையோ கதியையோ தெரிந்து கொள்ள முடியாது; உங்களுக்கும் தெரிவிக்க இயலாது. போகட்டும் எனினும் புதுமைப்பித்தன் தமது மனைவியோடு எப் படிப் பழகினார், எவ்வளவு வாஞ்சையோடு இருந்தார் என் பதற்குச் சில சம்பவங்கள் உபசாந்தியாக இருக்கும்; ருசி. கரமாகவும் இருக்கும். கமலாம்பாள் புதுமைப்பித்தளைப் , பற்றி - எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதி யிருக்கிறான் : அவரோடு பேசிக் கொண்டிருந்தால். பொழுது போவதே தெரியாது, வெற்றிலைச் செல்லமும் கையுமாக அடுப்பங்கரையிலேயே வந்து உட்கார்ந்து விடுவார். ஒரு சமயம் 'நண்பர்கள் வரவை எதிர்பார்ப்பார், 'இல்லை என்று விடு' என்பார். சிலசமயம் அவர் பேச்சைக் கேட்டு " நான் வாசல் கதவைத் திறந்து 'இல்லை' என்பேன், உடனே உள்ளே இருந்து கொண்டு, 'இருக்கிறேன் சார்' என்று கூறி என்னைத் தலைகுனியும்படிச் செய்துவிடுவார்....,

  • எனக்கு வேண்டிய, பதம் பிரித்து எழுதியிருக்கும்

புத்தகங்களை விலைகொடுத்து வாங்குவார். அவருக்கு எதி லெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அதையெல்லாம் நானும் விரும்பும்படி செய்வார். 'மனைவி என்றால் கணவனுக்குத் தொண்டு செய்யும் அடிமை' என்ற மனப்பான்மை சிறிதளவு கூட அவரிடம் காண முடியாது. எனக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்தார், 'வாழ்வில் தனக்கு ஒரு நியதி; மனைவிக்கு ஒரு நியதி' என்ற வித்தியாசம் அவரிடம் கிடை யாது. கையில் பணமிருந்தால் தாராளமாகச் செலவு செய் வார், இல்லாதபோது இல்லையே என்று வருத்தப்படவும் மாட்டார். இந்த மனப்பான்மையைப் பார்க்கும்போது என்னால் சகிக்க முடியாது; 'இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறீர்களே' என்பேன்." ' * நான் இருக்கும்போது நீ எதற்காக மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும்? நாளைக்குப் பார். எல்லாம் சரியாகி விடும்” என்பார் ...