பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i45 குடும்பமும், குழந்தையும் - * *இப்படியே போய்க் கொண்டிருந்தால் குடித்தனம் சீர்ப்பட்டாற் போலத்தான் என்று குடும்ப நிர்வாகத்தை யும் நானே ஏற்றுக்கொண்டேன். சம்பளம் வாங்கி என் கையில் கொடுத்து விடுவார், அவருக்கு ஏதாவது வேண்டு மானால் என்னைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.... ஒளிவு மறைவின்றி - நாலு பேர் முன்பு வைத்துக்கூட அவர் என்னிடம் அன்பாகப் பேசிப் பழகுவார். இதைப் பார்க்கும் உறவினர்கள்கூட, 'இவ்வளவுக்கு அவன் அவன் ளிடம் என்ன விசேஷத்தைக் கண்டான்?' என்று சொல் லிக் கொள்வார்கள்.....

    • ஒரு சமயம் அவர் தகப்பனாரிடமிருந்து ஒரு கடிதம்

வந்தது. அதில், ' நீ மனைவிக்கு ரொம்ப Freedom கொடுக் கிறாய். அது நமது இந்து சமுதாயத்துக்கே, தம் குல் ஆசாரத்துக்கே கெடுதல்' என்று எழுதியிருந்தார். இதைப் பார்த்து விட்டுச் சகிக்க முடியாத வேதனை அடைந்தேன் “ஏன் இப்படி எழுதினார்கள்? எனக்குப் புரிய வில்லையே!' என்றேன். • *' 'அட அசடே! நான் உன்னோடு Freeயாகப் பழகு கிறேன் அல்லவா? அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். அதற்காகவா இந்த வருத்தம்?' என்று எனக்குச் சமாதானம் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா? நான் எவ்வளவு வேண்டிக் கொண்டும் கேளா மல், தம் தகப்பனாருக்கே, 'உங்களுடைய அபிப்பிராயம் கிழவளை மணந்து கொள்ளும் பெண்களுக்குத்தான் . சரி. தான். அப்படியில்லை. நான் பொம்மைக் கலியாணமும் பண்ணவில்லை...' என்று எழுதிவிட்டார். தம் மனத்துக் குச் சரியில்லை என்று தோன்றும் எந்த விஷயமானாலும் யாரானாலும் அவர் இப்படித்தான் பதில் சொல்வார், இது தான் அவர் பிறவிக் குணம்... புதுமைப்பித்தன் தினமணியில் வேலை பார்த்து வந்த காலம் அது. புதுமைப்பித்தனின் மனைவி கமலாம்பாள் ஊரிலிருந்தாள். வீடு தேடிக்கொண்டு அழைத்து வருவ தாகப் புதுமைப்பித்தன் சொல்லியிருந்தார். வீடு கிடைத்த பு. பி. 7