பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புதுமைப்பித்தன் பிறகும் என்ன காரணத்தினாலோ-வீணாகத் தம் மனைவி யும் வந்து கஷ்டப்பட வேண்டாம் என்ற நினைப்பினாலோ என்னவோ --புதுமைப்பித்தன் . * வீடு கிடைக்கவில்லை; இப்போது வரவேண்டாம்' என்று மனைவியின் கடிதங் களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருந்தார். கமலாம் பாக்கும் கணவனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அவரது சம்மதம் வரும் வரையில் பொறுமையும் இடங் கொடுக்கவில்லை. எனவே, கமலாம்பாள் ' நான் வருகிறேன். ஸ்டேஷனில் சந்திக்கவும்' என்று ஒரு தந்தியைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டு விட்டாள். மறு நாள் காலையில் எழும் பூரில் மூட்டை முடிச்சுகளோடு புதுக் குடித்தனத்துக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்களுடன் வந்திறங்கினாள். ஆனால் ஸ்டேஷனில் புதுமைப்பித்தனைக் காணோம்! வேறு வழியின்றி கமலாம்பாள் ஒரு வண்டியையமர்த்திக் கொண்டு புறப்பட்டாள். ஆனால் எங்கே போவது? வீடு எங்கே? இது தெரியாத நிலை, கடைசியாக காலை - எட்டு மணிக்கு 'தினமணி' ஆபீஸ் முன்னால் வந்து இறங்கினாள் . மூட்டை முடிச்சுக்களையே துணையாக விட்டு விட்டு வண். டிக்காரனும் போய் விட்டான். ஆபீஸே: பத்து மணிக்கு. நடுத்தெருவில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித் துக் கொண்டு நின்றாள், கமலாம்பாள். ஆபீஸ் பையன் வந்தான். கதவு திறந்தது. தகவல் கொடுக்க ஆளில்லை. போன் பண்ணிப் பார்த்தும் யாரும் தகவல் கொடுக்க இயலவில்லை . கடைசியில் புதுமைப்பித்தனே பத்து மணிக்கு வந்து சேர்ந்தார்.

    • நடுத்தெருவில் விட்டு விட்டீர்களே, இது என் தலை

விதியா? என்றான் மனைவி. தந்தி கொடுக்காமல் ஏன் புறப்பட்டாய்? என்றார். கணவன்.

    • கொடுத்தேனே!

பிறகுதான் தந்தி கிடைக்காத செய்தியும், அதனால் ஏற்பட்ட அல்லல்களும் வெளியாயின. புதுமைப்பித்தன்