பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புதுமைப்பித்தன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இப்பொழுது உனக்கு அடுத்த படி குழந்தைதான் மனசைக் கவ்வுகிறது... புதுமைப்பித்தனுக்குத் தமது மகள் தினகரியின் மீது மிகுந்த பிரியம், தினகரியின்மீது அவர் எவ்வளவு பிரியம் கொண்டிருந்தார் என்பதை அவர் புனாவில் காச நோயால் அல்லற் பட்டபோது எழுதிய சில கடிதங்களே நன்கு கூறும். பின்வரும் கடிதப் பகுதிகள் அவர் தம் மனைவிக்கு எழுதியவற்றில் காணப் படுபவை:

  • 'என்னைப் பற்றி நீ பயந்துகொண்டு கிடப்பதைப்

போலக் கவலைப்படும் படியாக இல்லை.தினகரியைக் கவனி. பெரும் விதியைப் பற்றி யோசிப்பதை நம்மோடு வைத் துக் கொண்டு அவளுடைய உடம்பைக் கவனி....அவளுக் காக வாங்கிய சாமான்கள் கட்டிலுக்குக் கீழே இருக் கிறது. நாளைக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். சில பொம்மை வாங்க உத்தேசம்.... ".... அன்பு கண்மூடித்தனமாக இருப்பது விவேகம் அல்ல. நீ என் பக்கத்தில் இருப்பதானால் குழந்தையைக் உத்தேசித்தாவது நீ ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் , நான் சாகிறேன், பிழைக்கிறேன். அது விதிபோல். ஆனால் அதற்காக ஒன்றுமறியாத ஜீவனையும்' என் நோயைக் கொடுத்து அவஸ்தைப் படுத்துவதா? யோசித்துப் பார். அன்பு அறிவோடு சேர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட் டால் விபரீதம்தான்.... தினகரிக்கு எனது புதுவருஷப் பொய் முத்தம். அவள் கதி இப்படியாகும் என்று கனவிலும் நினைக்க வில்லை ....

  • * 'தினகரிக் குட்டி என்னைத் தேடுகிறாளா? சாயங்

காலத்தில் அவளை வெளியே எடுத்துப் போகிறாயா? அல் லது அழ விடுகிறாயா? ஒவ்வொரு நிமிஷமும் அவள் என் கண் முன்பு நிற்கிறாள். இங்கு வந்தீர்களானால் என் கவலை தீரும்...."" புதுமைப்பித்தன் தமது அந்திம காலத்தில் திரு வனந்தபுரத்துக்கு நோயின் கொடுமையையும் பாராது - ..