பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பமும், குழந்தையும் 113 தன்னந் தனியாகப் புறப்பட்டு வந்ததும், தினகதியைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆவலோடுதான், தினகரி வின்மீது அவருக்கிருந்த பாசம் அளவு கடந்தது. அதனால் தான் தம்மை இளவயதில் விட்டுப் பிரிந்த தாயின் பெயரை, பர்வதகுமாரி என்ற பெயரை, தினகரிக்குச் சூட்டியிருந்தார், புதுமைப்பித்தன். விடிவுகாலம் பிறந்து விட்டது என்று புதுமைப்பித்தன் கருதிய அந்த நாளில் தினகரி பிறந்ததால் அவருக்கு அவள்மீது ஒரே பிரியம். தாம் ஆரம்பித்து நடத்த முயன்ற சினிமா முயற்சிக்கும் கூட. பர்வதகுமாரி என்ற பெயரையே சூட்டியிருந்தார். புதுமைப்பித்தன் தினகரியின்மீது இத்தனை காதசை கொள்வதற்கு அவருக்குக் குழந்தைகள் மீதுள்ள ஈடுபாடு மாத்திரம் காரணமல்ல. இதற்குமுன் அவருக்குக் குழந்தைகள் பிறந்தும், அவற்றோடு கொஞ்சிக் குவைக் கொடுத்துவைக்க வில்லை. 'ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து! என்று கந்தசாமிப் பிள்ளை கடவுளிடம் தமது குழந்தையை அறி முகப்படுத்தி வைக்கிரே, அந்த மாதிரியான கருவேப்பி லைக் கொழுந்துதான் தினகரி. புதுமைப்பித்தன் தினகரி தான் தமக்குக் கடைசிக் குழந்தையாக, ஒரே குழந்தை யாக இருப்பாள் என எண்ணினார். அதனால்தான் அவர் ஒருமுறை தம் புத்திரியை ஒரு நண்பருக்கு அறிமுகப் படுத்தி வைக்கும்போது, தினகரி இருக்காளே, அவள் வழிச்சுவிட்ட தோசை மாதிரி. புரியலையா? தோசை சுடும்போது கடைசியிலே தண்ணி விட்டுக் கழுவி கடைசி மாவையும் தோசையாகக் சுடுவாஹ. எனக்குப் பிறந்த தெல்லாம் தவறிப் • போச்சு, இது என் கடைசிக் காலத் திலே வந்தது. அதனாலேதான் வழிச்சு ஊத்தின தோசைன்னேன்... என்று குறிப்பிட்டார். அவளுக்கு என்ன வயது என்று அதே நண்பர் கேட்டபோது, அவளுக்கா? அவளுக்கு வயசே கிடையாது. அவள் அறிவை வைத்துப் பார்த்தால் எனக்கு அவள் அம்மைப் பிராயம் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். புதுமைப்பித்தன்.