பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் கதையோ கட்டுரையோ எழுதும் போது நிதானமாக ஆர அமர இருந்து எழுதமாட்டார், பேனாவை எடுத்துவிட்டால், அந்தப் , பேனாவுக்குள் எங் கிருந்தோ ஒரு அசுர வேகம் வந்து புகுந்து விடும். விறுவிறு என்று மெயில் வேகத்தில் கை ஓடும். இடையிலே' வெற் றிலை போட்டுக் கொள்ளும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங் கனில் எழுதுவதில் ஸ்தம்பிப்பே ஏற்படாது , - புதுமைப் பித்தனின்' ஆரம்பகால சிருஷ்டிகளைப் பற்றிக் கூறு பவர்கள் அவர் தாவித் தாவிச் செல்லும் நடையிலே எழுது கிறார் என்று குறிப்பிட்டதுண்டு. அவரது பேனா செல்லும் வேகமே அதிவேகம்; அதைவிட, அவரது கற்பனை செல்லும், வேகமோ அதிலும் மிஞ்சிய வேகம்; எனவே அவரது. எழுத்துக்கள் தாவித் தாவிச் செல்லும் முறையில் இருந் திருந்தால் அதற்கு எழுதும் சாதனம்தான் குறைபாடுடை யது என்று கூற வேண்டும். புதுமைப்பித்தனின் கையெழுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளக் கூடிய பூப்போன்ற எழுத்துகள் அல்ல. 'என்னவோ 'சுருக்கெழுத்து எழுதிய மாதிரி இருக்கும். அங்குமிங்கும் கோடுகள் தெரிவது மாதிரிதான் பிரமை தோன்றும். எழுதிய காகிதத்தைக் கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வந்து கூர்ந்து பார்த்தால்தான், அதில் ஏதோ கொஞ்சம் தமிழ் எழுத்துக்கள் அங்குமிங்கும் தெரியும். சிலருக்குத் தலையெழுத்து நன்றாக இல்லாவிட்டாலும் கை யெழுத்து மட்டும் மணிமணியாக இருக்கும். புதுமைப்பித்த னது கையெழுத்தோ, அவரது தலையெழுத்தைவிட மோசமா யிருந்தது. அவரது கடிதத்தையோ கதையையோ லகுவில் படித்து விட முடியாது. கோழி கிண்டிய மாதிரி என்பார் களே, அந்தத் தினுசான கையெழுத்து. “என்னுடைய கையெழுத்து எனக்குப் புரியும்; என் எழுத்தைக் கம்போஸ் செய்பவனுக்குப் புரியும்' என்பார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனின் கையெழுத்து , மிகவும் மோசமாக இருந்ததற்கு அவரது தினசரிப் பத்திரிகையின் அசுரவேகத் தர்ஜமாத் தொழிலே காரணமா யிருந்திருக்கலாம். புது. மைப்பித்தன் . அசுரவேகத்தில் எழுதுபவராதலால், தமது வேகம் தடைப்படக்கூடாது. என்பதற்காக அருமையான, தலபெருக்கும்." எது கடித