பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவி 333 பசிக்குது சாமி, சோறு ஏதாச்சும் இருந்தாக் குடு" என்று கேட்டான். கொடுப்பதற்கு அந்தச் சமயம் * அவ சிடம் ஒன்றுமில்லாததால் அவன் ஏமாந்து திரும்பினான்.. ஆனால் மறுநாள் இரவில் நானும் புதுமைப்பித்தனும் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்துச் சாப்பிட் டோம். சாப்பாடு மிஞ்சி விட்டது. உடனே புது மைப்பித் தன் அந்தச் சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு வெளியே புறப்பட்டார். நேத்தே கேட்டான். பாவம், காலையிலே யாரிடமாவது போடுவதை இப்போதே அவனுக்குக் கொடுத்தால் என்ன?' என்று கூறிவிட்டு, பக்கத்தி லிருந்த டிராம் ஷெட்' ரிக்ஷா ஸ்டாண்டுக்குச் செcஸ் 2, அந்த ரிக்ஷாக்காரனிடம் 'சாப்பாட்டைக் கொடுத்து விட் டுத் திரும்பி வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் தம்மோடு பழகும் . நண்பர்கள்- அவர்கள் பிரபல எழுத்தாளர்களாயினும் சள், குட்டி எழுத்தாளன் ஆயினும் சரி -யாராயிருந்தாலும் எல்லோ ரிடமும் ஒரே மாதிரிதான் பழகுவார். ' சிறியவஸ், பெரி azவன்' என்ற வித்தியாசம் கிடையாது. திறமை இருப்ப வர்களைப் போற்றுவார்; இளம். எழுத்தாளர்களை ஊக்குவிப் பார். ஆனால் *உருப்படியாக மாட்டான்' என்று உத்தரவாத மாகத் தெரியும் நபர்களைத்தான் வெறுத்து ஒதுக்குவார், ஆனால் அவரைப் பார்க்க வருபவர்கள் அவரை நண்ட, ராகவே பார்க்க வரவேண்டும். தம்மை அவரது சிஷ்யன் என்றோ , பரம ரசிகன் என்றோ ' விளம்பரப் படுத்திக் கொண்டு வருபவர்களை அவர் ஏற்றுக் கொள்ளவே மாட் டார். ஒரு தடவை நண்பர் அழகிரிசாமியை ஒருவர் புதுமைப்பித்தனுக்கு முதன்முதல் இனம் காட்டியபோது “இவர் அழகிரிசாமி.' உங்கள் சிஷ்யர்” என்று கூறினார். • * சிஷ்யனென்று சொல்லாதீர்கள். சிஷ்யன் என்றால் மேல்வீடு காலி என்று அர்த்தம், நண்ரென்றும் சொல் லுங்கள்” என்று அந்த ஆசாமிக்குப் பதில் கொடுத்தார் புதுமைப்பித்தன், இதுபோலவே இன்னொரு தடவையும் அவர், என்னிடம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ஒரு எழுத்தாளர் தமது நூலொன்றைப் புதுமைப்பித்தனுக்குக் குச் சமர்ப்பணம் செய்து, தமது 'ஏகலைவ பக்தியின் அவை.