பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • சோவி

137 விடவேண்டும் என்று விரும்புபவர் என்பது புலனாகிறது. இதைக் கூறவேதான் இந்த சந்தர்ப்பங்களைக் கூறினேன். இப்படியெல்லாம் பல அரிய குணங்கள் வாய்த்திருந்த புதுமைப்பித்தனிடம் சில விபரீத குணங்களும் இருந்தன, புதுமைப்பித்தன் தாம் எழுதும் எழுத்துக்களில் எவ்வளவு விசுவாசமும் நேர்மையும் கொண்டிருந்தாரோ, அந்த நேர்மை சமயங்களில் அவரது பேச்சில் இருக்காது. ஒரு எழுத்தாளரை அவர் முகத்துக்கு நேராகவே சமயங்களில் புகழ்வார். அவரது முதுகு மறைந்தபின் 'ஆசாமி தலை சுத்திக்கிட்டுப் போறான். அவன்" கதையை அவன்தான் மெச்சிக்கிடணும்' என்பார். “பின் ஏன் அப்படிச் சொன்னீர்கள்?' என்று கேட்டால், 'சொல்லி வைத்தால் கிடக்கு. அவனைக் காலைவாரி விடு தற்கு இதுதான் வழி' என்பார். ஆனால், இந்த மாதிரிப் பேசு வதோ அல்லது புகழ்வதோ, எந்தவிதக் கள்ளத்துடனோ அல்லது அவர் கூறுவதைப்போல் காலைவாரி விடவேண்டும் என்ற எண்ணத்துடனோ கூறும் பேச்சல்ல. அந்தச் சமயத்தில் அவரது 'வாய் சொல்வதற்கு அவர் பொறுப்பாளியாக மாட் டார். அவரது வாயில் அடக்கம் என்பதே கிடையாது. புதுமைப்பித்தன் டிராமிலோ பஸ்ஸிலோ பிரயாணம் செய் தால், டிராம், டிக்கட்டுகளைக் கசக்காமல் வைத்திருந்து வீடு கொண்டுவந்து சேர்த்து, குப்பைத் தொட்டியில் போடுவார்.

  • ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'தூரப்

போடுவானேன்?' என்பார், கடைசியில் ஒருநாள் அத்தனையை யும் தூரப் போடத்தான் செய்வார். இந்த விசித்திர குணத்தில் எவ்வளவு அர்த்தம் உண்டோ அவ்வளவு அர்த்தம்தான் அவரது ஏறுக்குமாறாகப் பேசும் சில பேச்சுக்களிலும் உண்டு. இந்த ஏறுமாறான விசித்திர குணத்தால் புதுமைப்பித்தன் அநாவசியமாகப் பொய் சொல்லுவார். ஆனால், அந்தப் பொய்கள் எந்தவித லாபத்தையோ பயனையோ கருதிச் சொல் லப் படுபவை அல்ல; வேடிக்கைக்குத்தான் சொல்கிறார் எனச் சமாதானம் கொள்ளவேண்டும். பு. பி.