பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்கி ஷித்தார், இடையிலே அவருக்கு ஏதோ ஒரு பெயர் மறந்து போய் விட்டது. எதிரே நானிருந்தேன். யோசித்துப் பார்த்தார், பிறகு என்னிடம் திரும்பி, “என்ன ராசா, நீதான் சொல் லேஸ் என்று கேட்டார், எனக்கு அவர் எதைக் கேட்கிறார் என்பது எப்படித் தெரியும்? வாயைத் திறவாமல் இருந்தேன். பிறகு, அவரே சொன்னார்; விடுங்கள் அதை. இந்தப் பேர் எழவு ஒரு பேரெழவுதான்! என்று ஒரு ஹாஸ்யத்தை, எரிச்சலில் பிறந்த ஹாஸ்யத்தைச் சொல்லி நிலைமையைச் சமாளித்துக் கொண்டுவிட்டார், புதுமைப்பித்தன் தமது இளமைக் காலத்தில் திருநெல் வேலியில் இருந்தபோது யாரோ தம்மைப் பேசச் சொன்னார் கள் என்பதற்காகச் சரியென்று தலையாட்டி விட்டார். பாளையக்" கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கூட்டம், பெரிய மண்ட எம். சுமார் ஆயிரம் பேர் இருக்கலாம். அங்கு கூடியிருந்த சிறு கூட்டத்தில் புதுமைப்பித்தன் பேசினார், “காணாமல்போன உபாக்குவெட்டி!' என்பது பிரசங்கத் தலைப்பு.

  • 'விறகு தறிக்கக் கறி நறுக்க....' என்று ஆரம்பமாகும்

பழந்தமிழ் தனிப்பாடல்தான் அவர் எடுத்துக் கொண்ட பொருள், ஆனால், மேடையில், - ஏறியவுடன். அவரால் பேசவே முடியவில்லை, ஏனெனில் அந்தப்பாட்டு அவருக்கு வாயில் வரவே இல்லை. மறந்து போய் விட்டது. மேடையருகே தமிழாசிரியர் கு. அருணாசலக் கவுண்டர் உட்கார்ந்திருந் தார். அவர் புதுமைப்பித்தனின் நண்பர். உடனே அவரைப் பார்த்து.. வே. பாட்டும் மறந்து போச்சி! அர்த்தமும் மறந்து போச்சி! கொஞ்சம் சொல்லிக்குடும்'வே! என்று கேட்க ஆரம்பித்து விட்டார். இதுதான் புதுமைப்பித்தனின் பிரசங்கம்!