பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 புதுமைப்பித்தன்

  • நீங்களும்தாம் அழுகிறீர்கள்? இந்த மண்ணின்

வலிமை யாரை விட்டது! ஆனால் ஒன்று. சந்திக்கும்போது அழுதால், பிரியும்போது சிரிக்கலாம் அல்லவா? என்ருர் புதுமைப்பித்தன், தேசன்னைக்கு காந்திஜி வந்திருந்த சமயத்தில் தியாக ராங் நகரில் ஒரு எழுத்தாளர் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் புதுமைப்பித்தனுக்கும் அழைப்பு வந்திருந்தது. கூட்டத்துக்குச் சென்ற எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் மகாநாட்டின் பிரதிநிதி என்பதைக் குறிக்கும் , பாட்ஜுகள் வழங்கப்பட்டன. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பாட்ஜுகளோ, ஹிந்தி பாட்ஜுகள், புதுமைப்பித்தனுக்கு ஹிந்தி தெரியாது. இருந் தாஜம் ஓவிந்தி எழுத்து எப்படி இருக்கும் என்பது தெரியும். எணீனும் அவர் அந்த பாட்ஜை வேண்டுமென்றே தலைகீழாகக் குத்திக் கொண்டார், யாராவது கேட்டால் 'தெரியாத பாஷையை எப்படிக் குத்தினாலும் ஒன்றுதான்!' என்று கூறி அந்த பாட்ஜை - வழங்கியவர்களுக்குச் சூடு கொடுத்தார் புதுமைப்பித்தன். இது என்னப்பா பாஷை? எழுத்துக்கள் எல்லாம் தலைகீழாக வெளவால் மாதிரி' தொங்கிக்கிட்டு இருக்கு. அதனால்தான் நான் அதை நேராகத் திருப்பிக் குத்திக் கொண்டேன். கொஞ்சம் அழகாயிருக்கட்டுமே!” என்று கேலியும் செய்தார் அவர். தா மா வரேர்கார் என்ற மராத்தி எழுத்தாளருக்குச் சென்னை எழுத்தாளர்கள் ஒரு உபசாரக் கூட்டம் நடத்தி னார்கள், அந்தக் கூட்டம் முடிந்து. திரும்பும்போது நண்பர் கொத்தமங்கலம் சுப்பு - புதுமைப்பித்தனையும் அவருடன் வந்த சில எழுத்தாள நண்பர்களையும் தம் வீட்டுக்கு அழைத்தார். கொத்தமங்கலம் சுப்பு அப்போது தமது 'காந்தி மகான் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அதை வாசித்துக் காட்டத்தான் அவர் அழைத்தார். 'ராத்