பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புதுமைப்பித்தன்' விபரீத நிலையில் அவர்களைப் புகுத்திவிடும். மதிப்புரை எழுது வோர் கொஞ்சம் ரண வைத்தியரின் மனப்பான்மையைக் கொண்டிருப்பதால் உண்மையிலேயே சக்தி பெற்ற இலக்கி? கர்த்தர்களைச் சாகடித்து விட முடியாது. இதற்குப் பாரதியார், சிறந்த உதாரணம்....' புதுமைப்பித்தன், விமர்சன விஷயத்தில் இப்படிப்பட்ட ஏண வைத்தியரின் மனப்பான்மையோடுதான் நடந்து கொண்

  • * * எனது பாலிய நண்பர் (இன்னாரை' சமீபத்தில் ஆசிரிசல்

ராகச் சந்தித்தேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தின் மூலம் கிரந்த கர்த்தராகச் சந்திக்கிறேன். இது மகிழ்ச்சிக்குரிய விஷயமா என்பது அவரிடம் நேரில் சொல்ல வேண்டியது விஷயம் ..." என்று ஆரம்பமாயிற்று. அவரது: கண்டன. மதிப் புரை ஒன்று. 3மதிப்புரை எழுதுவதில் அவருக்கு நண்பர் என்றே, பல வர் என்றே விருப்பும் கிடையாது: வெறுப்பும் கிடையாது. இது போலவே ஒரு கதாசிரியரின் க்தைத் தொகுதியைப் பற்றி எழுதியபோது ' '........ சாரமற்ற கதைக் கு வி பல் என்று அவர் ஒரே வரியில் எழுதிவிட்டார், அந்தக் கதாசிரியர் பின்னொரு முறை) புதுமைப்பித்தளைச் சந்தித்தார், அப்போது புதுமைப்பித்தனிடம் அவராகவே அந்த மதிப்பு கரயைக் குறிப் பிட்டுக் கூறி, ** நீங்கள் புதுமையான ஆசாமிதான். ; ஆனால் பித்தமும் உங்களுக்கு இருக்கிறதல்லவா?” என்று புதன:33 பித்தனைக் குத்திக்காட்ட விரும்பினார். புதுமைப்பித்தன் தமக்குள் எழுந்த கோபத்தை உள்ளடக்கிக்கொண்டு பதில் சொன்னார்: பித்தன் தான்! ஆ 1.31ல் இந்தப் பித்தன் அந்த. மதிப்புரையை எழுதும்போது : நெற்றிக் கண்ணைத் திறக்க. வில்லை, திறந்திருந்தால் நீங்கள் இன்று என் எதிரில் நின்று பேச முடிந்திருக்காது!” அதற்குமேல் புதுமைப்பித்தனோடு பேசுவதற்கு அந்த ஆசிரியருக்குப் 'பித்தமா' என்ன? போய் விட்டார்! புதுமைப்பித்தன் காரசாரமாக மதிப்புரை எழுதுவது போலவே ஹாஸ்யமாகவும் எழுதுவதுண்டு. ஒரு ஹிந்தி எதையின் மொழிபெயர்ப்பு மதிப்புரைக்கு வந்திருந்தது,