பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 புதுமைப்பித்தன் புத்தகத்தின் முன்னுரையில் ஒரு விஷயம் - குறிப்பிடப்பட்டிருந் தது. அதாவது, வாழ்க்கையிலே தோற்று நொடித்துத் தம் கொலை பண்ணிக் கொள்ளப்போன . ஒருவன் அந்தக் கதையைப் படிக்க நேர்ந்து, பின் மனம்மாறி வீடு திரும்பி. அதன்பின், கோடீசுவரன் ஆனான் என்ற ஒரு உண்மைச் சம்பவத்தைக் கூறி, அந்தக் கதைக்குப் பெருமை. தேடியிருந் தார் மொழிபெயர்ப்பாளர், புதுமைப்பித்தன் அந்தப் புத்தகத் துக்கு மதிப்புரை எழுதும் போது இதே விஷயத்தை குறிப் பிட்டுவிட்டு, ' வாசகர் களும் அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தாடும் கோடீசுவரன் " ஆகிவிடலாம் என்று எதிர் பார்க்கக் கூடாது என்று கூறி, கீழே குறளிலிருந்து ஒரே ஒரு . -வரியை மட்டும் எடுத்து எழுதியிருந்தார்:

  • 'திருவேறு; தெள்ளிய ராதலும் வேறு!

இலக்கியத்திலும் இலக்கியத்தை விமர்சனம் செய்வதிலும் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு: 1. திருட்டு இலக்கியம். 2., இலக்கிய ஆசிரியர்களை வேறொரு பிரபல இலக்கிய ஆசிரியராகப் {தமிழ் நாட்டு பெர்னாட்ஷா, தமிழ்நாட்டு ஷேக்ஸ்பியர் என்பது போல்) பட்டம் சூட்டி அழைப்பது, 'தழுவலா. மொழிபெயர்ப்பா' என்பது குறித்து, அந்தக் காலத்து இலக்கிய கர்த்தாக்கள் மணிக்கொடியில் 'யாத்ரா மார்க்கம்' என்ற தலைப்பில் சர்ச்சை செய்தார்கள். புதுமைப் பித்தன் மொழிபெயர்ப்பு ஒன்றையே ஆதரிப்பவர்; பிற நாட்டு இலக்கி2:ங்களைத் தழுவி எழுதுவதை ---அதாவது மூலத்தைக் குறிப்பிடும் நேர்மையான தழுவல், குறிப்பிடாத திருட்டுத் தழுவல் உள்பட ~ எல்லாவற்றையும்-எதிர்ப்பவர். அதற்கு அவர் கூறும் காரணம் இது: - - ' 'கதையைத் - - தழுவித்தான் $ாழுதவேண்டும் , என்று விவாதிக்கிறவர்கள் ஒரு கட்சி. தமிழ் மக்கள் விதேகி ஆசாரங் களை-ஒன்றும் புரியாது என்பதால்-ாசிக்கமாட்டார்கள் என்பது இவர்கள் கூற்று. இக்கட்சி. பேசுகின்றவர் கள்', 'தம்மையே தம் - வாதத்தால் , அளந்து கொன்கின் ற னர்,, : “ஏன், ஸார், சோப்புக் : கதைகள் இருக்கிறதே,