பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பள்ளிப் படிப்பினிலே'... யில் குடியேறி, இன்றும் அங்கேயே வாழ்ந்து வருகிறார். சொக்கலிங்கம் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்து சேரும் போது புதுமைப்பித்தனுக்கு வயது பன்னிரண்டு. பால் யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து உருவேறும் து டி.யான பருவும். தந்தையின் நிரந்தரமான. வாசத்தால், புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் 1918- ஆம் வருஷத் துக்குப் பின் நிலைத்து ஸ்திரமாயிற்று: திருநெல்வேலியில் அவர் கல்வி கற்றுக் கொள்ளத் தொடங்கினார். தமிழ் மொழி' பொருப்பிலே பிறந்தாலும், தென்னன் புகழி லே வளர்ந்தது போல், புதுமைப்பித்தன் - திருப்பாதிரிப்புலி யூரில் பிறந்தபோதிலும், அவரை ஆளாக்கி விட்டது தென் னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான். எத்த னையோ அறிஞர்களையும், புலவர்களையும் எழுத்தாளர் களையும் அன்றும் இன்றும் ஈன்று தந்து கொண்டிருக்கும் தாமிரபருணித் தாய் தான், சொக்கலிங்கம் பிள்ளையின் தலை. கனாக இருந்த சொ: . : 'விருத்தாசலத்தை, தமிழன்னை மயின் தவம்கனான் புதுமைப்பித்தனாக உருவாக்கி விட்டாள். புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பு, திருநெல்வேலி கிறிஸ்தவக் திருச்சபையைச் சேர்ந்த அர்ச். யோவான் ஸ்தாபனக் கல்விக் கூட்டத்தில் நடந்தேறியது. பன்ளிப் படிப்பைப் பொறுத்தவரை திருநெல்வேலியிலும் அவர் சூட்டிக்கையாக இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும், 'ஆர அமர இருந்துதான் அடுத்த - வகுப்புக்குப் பால் வாங்குவார். பள்ளிப்பிடிப்பு இந்தப் புள்ளிக்கு உதவவில்லை யெனினும், பரந்து கிடக்கும் - உலகப் பள்ளியின் உள்ளோட்டங்களை ம்ம் சலனங்களையும் புதுமைப்பித்தன் நன்கு கிரகித்து. சிறந்த அனுபவக் கல்வியை விருத்தி செய்துகொண்டார். இதனால் அவர் இளமையில் புத்தகங்களை வெறுத்தார் என்று சொல்ல வரவில்லை; பள்ளிப் புத்தகங்களைத்தான் வெறுத்தார். கறிக்குதவாத ஏட்டுச்சுரைகளைத் தயார் செய்துவிடும் கல்வி முறைதான் அவருக்கு ஒட்டவில்லை பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயா Privணதும் புதுமைப்பித்தனின் குருகுலம். யோவான் கலா சாலையிலிருந்து, இந்துக் கல்லூரிக்கு இடம் .. மாறியது,