பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பள்ளிப் படிப்பினிலே....' 17 பதிலாகத் தமிழும் அவரும் உலகமும் பெருமைப்படத் தக்க அருமையான சிறுகதைச் செல்வத்தைச் சிருஷ்டித் துத் தந்தது. - புதுமைப்பித்தனின் நாவல் .. பைத்தியத்தை அவரது தந்தை அறிவாரா என்ன? பிள்ளைக்குப் படிப்பில் அக் கறை வந்து விட்டது என்றே கருதினார். புதுமைப்பித் தனோ இரவு ஒருமணி இரண்டு மணிவரை கண்விழித்து தாவல்களைப் படித்துக் கொண்டிருப்பார். இதைக் கண்டு சொக்கலிங்கம் பிள்ளைக்கு உள்ளூர மகிழ்ச்சி தாண் டி.வ மாடும். பள்ளிக்கூடப் : பாடங்களை ஒழுங்காகப் படிக் காத தமது மற்ற பிள்ளைகளைக் 'கண்டிப்பார்; புதுமைப் பித்தனையோ இரவில். அகாலம் வரையிலும் படித்துக் கொண்டிருப்பதற்காகக் கண்டிப்பார். பள்ளிப் படிப்பில் கவனம் இல்லாத காரணத்தால் புதுமைப்பித்தன் கல்லூரிப் படிப்பையும் சீக்கிரம் முடிக்க முடியவில்லை. மேலும், கல்லூரியிலும் புதுமைப்பித்தன் குறும்புக்காரப் - பிள்ளை. ஒரு தடவை தமது ஆசிரியர்: ஒருவரைப்பற்றிக் கல்லூரிக் கரும்பலகையில் கிண்டலாக எழுதி வைத்து விட்டார். அந்த ஆசிரியர் தான் பலவருஷ காலமாக இந்துக் கல்லூரியில் பணியாற்றி வந்த வி. பொன்னுசாமிப் பிள்ளை;. இந்துக் கல்லூரியின் வைஸ் பிரின்ஸிபால்; சரித்திரப் பேராசிரியர்.. புதுமைப்பித்தன் எழுதிவைத்த குறிப்பு இதுதான்:

  • Mussolini is the dictator of Italy;

Our V. P. is the dictator of Notes! அடி ஆசிரியர்டம் சரித்திர மாணவர்களாகப் '2. காடம் பயின்ற மாணவர்களுக்கே இந்த ஹாஸ்யத்தின் உண்மை யான சுவை மிகமி 5' ரசிக்கத்தக்கதாயிருக்கும்!

    • முஸோலினி இத்தாலி பின் சர்வாதிகாரி; நமது கி, பி.

யோ ' ேநாட்ஸ்' ஒப்புவிப்பவர், டிக்டேட்டர் என்ற பதம் சிலேடைப் பிரயோகம்; வி. பி. என்பதும் அப்படியே. வி. பொன்னுசாமிப் பிள்ளை என்பதற்கும், வைஸ் பிரின்சிபால் என்பதற்கும். பொருந்தும். . ..............,