பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம். பிள்ளை திருவள்ளுவரின் காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதி. யிருந்தார். அதில் மற்றவர்கள் கூறி வந்த காலத்துக்கும் பிற்பட்... காலத்தைச் சேர்ந்தவர் திருவள்ளுவர் என்று எழுதியிருந்தார். இதைப் படித்த ஒரு பண்டித நண்பர் அழகிரிசா மியிடம் இந்த வையாபுரிப் பிள்ளையே இப்படித் தான். பழை: தமிழ்ப்புலவர்களின் காலத்தையெல்லாம் மிகவும் பிற்பட்டதாகவே கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதைக்கூறி " இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பண்டித நண்பர்கள் கோபித்துக் கொள்வதில் அர்த்தமுண்டா? என்று புதுமைப்பித்தனிடம் கேட்டார். அதற்குப் புதுமைப்பித்தன், பண்டிதர்தானே. நம் பண்டிதர் களுக்கு நமது பழைய புலவர்களின் காலத்தையும் இலக்கியக் களின் காலத்தையும் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னால் தள்ளிப் போடுவதில் பரமதிருப்தி. அப்படிச் சொல்லிக் கொள்வ தில் ஒரு பெருமை. 'டார்வின் பரிணாமத் தத்துவப்படி தோன்றிய முதல் குரங்கே தமிழ்க்குரங்கு என்று சொன்னால்தான் நம்மள வனுக்குத் திருப்தி! என்று தமக்கே உரிய நகைச்சுவையோடு கூறிவிட்டார். கொஞ்சம் Crude ஆன ஹாஸ்யம்தான். என்றாலும் அவர் சொல்லக் கருதிய விஷயத்தை இதைக் காட்டிலும் அழுத்தமாகக் கூறியிருக்க முடியாது. இல்லைQ4x? கேள்வி: -

பொதுவாக அவரிடம் நேரில் பழகும்போது ஒரு தீவிர நிலை

எய்திவிட்ட மனத்துடன் தொடர்பு கொள்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுமா? அல்லது ஒரு விளையாட்டுப் போக்குடைய மனிதருடன் நேரம் சுவையாகக் கழிகிறது என்ற எண்ணம் ஏற்படுமா? - ', : - பதில்:

- தீநிரநிலை என்று நீங்கள் கூறுவது ஒரு Superieve'தான் என்று கொண்டால், அவரோடு பழகும்போது நமக்கு' 'அத் தகை&# 2..ணர்வு ஏற்படாது. என்றாலும், உலகஞானமும் அறிவு விசால மும் மிக்க ஒரு மேதையோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு நிச்சயமாக ஏற்படும், அவருடைய பேச்சில்