பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அனுபந்தம் - 228 வுயர்ந்த அபிப்பிராயம் உண்டு. தமிழில் சிறுகதைக்கு உயிரும் உருவும் கொடுத்தவர் அவர்தான் என்பது அவர் கருத்து , அவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்றே மதிப்பார். உட: லே. சர். தமிழுக்குச் செய்த தொண்டு மிகப்பெரிது என்று போற்றுவார். திரு. வி. க., வின் பத்திரிகையுலக சேவையைப் பாராட்டுவார், ரசிகமணி டி.கே.சி.யிடம் அவருக்கு மிகுந்த மரி? யாதை உண்டு. அவரது கருத்துக்களோடு புதுமைப்பித்தன் வேறு பட்டதும் உண்டு. பாரதிதாசனைப் 'பாரதி விட்டு வைத் துப்போன சொத்து' என்று. புதுமைப்பித்தனே எழுதியிருக் 'கிறார். அவரைப் பற்றித் தனிக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். கவிமணியின் கவிதைகளின் எளிமையைப் பாராட்டுவாள். ஆனாலும் ச. து . சு. யோகியாரையும். பாரதிதாசனேரம் மதித்த அலாவுக்கு அவர் கவிமணியைப் போற்றியது இல்லை. பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் முதலியோரைப் பற்றி புதுமைப்பித்தன் உயர்ந்த அபிப்பிராயம் எதுவும் கொண் டிருக்கவில்லை. அதற்கு அவர்களது தனித் தமிழ் நடை என்ற பொய்யான நடைதான் காரணம். .: கேள்வி : அவசரமாகக் கதைகள் எழுத நேர்ந்தது என்று சற்றும் பெருமையுடனேயே அவர் சொல்வீக் கொள்கிறார். 'செல்லம் மான்,' 'சாபவிமோசனம்' 'சுப்பையாபிள்ளையின் காதல் கள், * சிற்பியின் நரகம்' ஆகிய கதைகளைப் படிக்கும்போது நிதானமாக உருவாக்கிய தன்மையை அவை காட்டுகின்றன, சந்தர்ப்பு சௌகரியத்தை ஒட்டி இரண்டு விதமாகவும் அவர் எழுதியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. உங்கள் அபிப் பீராயம் என்ன? அவசரமாக எழுதினேன் என்று அவர் சொல்வது ஒலி றும் பெருமை பாராட்டிக் கொள்வதல்ல, எனக்குத் தெரிந்த வரையில் அவர் பல கதைகளையும் அப்படித்தான் எழுதினார். அவர் எழுத 'உட்கார்ந்தால், அசுரவேகத்தில்' கை ஒடும். அநேகமாக அடித்தல் திருத்தல் அதிகம் இருக்காது. சில்