பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் வழி இருட்டு ! 25 காதலாப் பெயராகிவிட்டது! இந்தக் கடைச் சங்கத்தில் பி. ஸ்ரீ. ஆசாரியா, வையாபுரிப் பிள்ளை முதலியோ கும். உண்டு; புதுமைப்பித்தனும் அங்கு செல்வது வழக்கம். இலக்கிய சர்ச்சையிலும் சிருஷ்டியிலும் பொழுதைக் கழிக்க முனைந்த புதுமைப்பித்தனின் வாழ்க்கை அவ: ருக்குப் பிடித்திருந்தது; ஆனால் அவரது தந்தைக்குப் பீடிக்கவில்லை, தமது ஆசையை. : யெல்லாம் நிராசையாக்' விட்டு, சொன்னபடி கேளாமல் சுற்றித் திரிகின்ற மகனின் போக்கு, முதலில் தந்தைக்குப் பிடிக்கவில்லை. 'படிச் சாச்சி. கலியாணம் பண்ணியாச்சி. எங்கேயாவது ஒரு வேலை வெட்டியைப் பார்த்து, நாலுகாசு சம்பாதிக்க வேண்டாமா? சும்மா - சுத்திட்டுச் சுத்திட்டு வந்து சோத் தைப் போடுன்னா, யார் போடுறது?' என்று ஒரு தந்தைக் குரிய நியாயமான நீதியைப் போதிக்க ஆரம்பித்து விட், டார் சொக்கலிங்கம் பிள்ளை, தந்தையின் உதாசீனம் . மட்டும் , புதுமைப்பித்த வைத். தாக்கவில்லை, தாயை இழந்த புதுமைப்பித்தன் மாற்றுந் தாயின் ஆட்சியில்தான் வளர்ந்து வந்தார். 'மாற்றாந் தாயின் கொடுமையைப்பற்றிக் கதைகளில் சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். அது உண்மையா இருக்குமா, உயர்வு நவிற்சியா என்றுகூட நமக்குச் சந்தேகம் தட்டுவ துண்டு. ஆனால் உலக வழக்கில் அன்போடிருக்கும் மாற்றத், தாய் , ஆயிரத்தில் ஒருத்தி, புதுமைப்பித்தனின் 'மாற்றாந் தாய் அந்த ஒருத்தியை நீக்கிய பலரில்' ஒருத்தி. எனவே அவர் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகியே வளர்ந் தார், பின்னர் தந்தையும் அவரைக் கடிந்து உதாசீனம் செய்யத் தலைப்பட்ட , நிலைமை, சிற்றன்னையின் கொடு மைக்கு விசாலமாகப் . பாதை வகுத்துக் கொடுத்தது. தமது சித்தியிடம் புதுமைப்பித்தன் என்றுமே அன்பைக், கண்டதில்லை. ஆனால் தமக்குக் கல்யாணமான பின்னர் அவளது ஆத்திரத்தையும், அசூயையையும் பிரத்தியட்ச மாகக் கண்டு அவர் மனம் புழுங்கினார், கல்யாணமாகி ஒரு வருஷ காலம்தான் முடிந்திருக்கும். அதற்குள் மாமி உருகித் தகராறுகள் கிளம்பி விட்டன, பு. பி.-3