பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் வழி இருட்டு 27 கொப்புளித்துப் பொங்கும் என்பது அவருக்கே தெரியா திருந்தது. ஆனால், ஒருநாள் இரவு -- வழக்கம் போலவே தந்தையும் சித்தியும் அவர்மீது வசை புராணம் பாடிக் கொண்டிருந்தார்கள், புதுமைப் பித்தன் அத்தனையையும் கேட்டார். சூடேறி நின்ற உள்ளம் - உள்ளுக்குள்ளேயே எரிமலைக் குழம்புபோல் கொதித்து நின்ற உள்ளம் - சீறியெழுந்தது' . ** இனிமேல் இந்த வீட்டில் நான் இருக்கப் போவதில்லை" என்றார் புதுமைப்பித்தன், எங்கேயாவது தொலைந்தால் சரி தான்” என்றார் தந்தை. ஆனால் எதை நம்பி வெளியில் செல்வது? புதுமைப்பித்தனின் . கல்யாணத்தின்போது பெண்ணுக்கு நகையாகப் போடுவதற்குப் பதிலாக, பண் மாகக் கொடுத்திருந்தார்கள் பெண் வீட்டார். புதுமைப் பித்தன் அந்தப் பணத்தைக் கேட்டார், தந்தை தர மறுத் தார். வாக்குவாதம் முற்றியது. ஆனால் சொக்கலிங்கம் பிள்ளை 'கடைசி வரையில் அசைந்து கொடுக்கவில்லை. புதுமைப்பித்தனும் அங்கு இருக்க விரும்பவில்லை. அவ்வளவுதான். புதுமைப்பித்தன் துண்டை உதறித் தோளில் போட்டார்; கட்டிய மனைவி கமலாம்பாளின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த 'அர்த்த ராத்திரி யிலேயே நடையைவிட்டுக் கீழிறங்கி விட்டார், தெருவுக்கு வந்து நின்று சிறிது நேரம் கழிந்த பின்னர்தான் அவர் தம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்த சர் . கையில் பணமில்லை; வேலையில்லை; வீட்டு ஆதரவும் இனிமேல் கிடையாது. காணாக்குறைக்கு, துணைக்கு ஒரு கால்கட்டு - மனைவி. எங்கே போவது? என்ன செய். வது?....எதற்கும் பதில் கிடையாது. செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு. சிந்தை அறிவினிலும் தளி இருட்டு!