பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-3 Kானார் ஜென் இழைத், பைங் கரைணம் 1936-ம் வருஷத்தின் இடையிலே நின்றுபோன மணிக்கொடிப் பத்திரிகை ஒரேயடியாக நின்று போய்விட வில்லை. பி. எஸ். ராமையாவும், கி. ரா. வும் அதை எப்படி யும் மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என வைராக் கியம் கொண்டார்கள். இந்த வைராக்கிய சித்தத்தின் வெற்றியாக, மணிக்கொடி மீண்டும் அதே வருஷம் செப் டம்பர் மாதத்தில் ஆரம்பமாயிற்று. எண்ணற்ற கஷ்டங்களுக்கிடையே வளர்ந்து மறைந்த மணிக்கொடியை மீண்டும் பழைய குசேலப் பிறவியாகத் தோற்றுவிக்க விரும்பவில்லை. அதற்கு வழியும் இல்லை. எனவே ALணிக்கொடி என்ற பத்திரிகையை ஒரு ஸ்தாபன மாக்கி, அந்த ஸ்தாபனத்தின் வெளியீடாக மணிக்கொடிப் பத்திரிகையையும், இலக்கியம், அரசியல் புத்தகங்களையும் வெளியிடுவது என முடிவு செய்து, அதற்கான முயற்சியில் சுமார் ஒரு வருஷ காலம் பி. எஸ், ராமையாவும் அவரது சகாக்களும் பாடுபட்டு வந்தார்கள். அந்த முயற்சி ஒரு மட்டும் பலித்தது. அதன் பலனாக, 'நவயுகப் பிரசுராலயம்' என்னும் லிமிட்டெட் ஸ்தாபனம் உருப்பெற்றது, 40, 000 ரூபாய் மூலதனத்துடன் தொடங்க எண்ணிய அந்த ஸ்தாபனம் பல பேருடைய ஒத்துழைப்பின் மூலம் உருவா யிற்று. இது நடந்தது 1937-ம் வருஷத் தொடக்கத்தில்.