பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துமைப்பித்தன் வேறொரு படத்துக்குக் கதை வசனம் எழுதும் பொறுப் தம் புதுமைப்பித்தனுக்குக் கிட்டியது. பாஸ்கர் பிக்சர் கின் முதலாளி நந்தலால் என்பவர் புதுமைப்பித்தனோடு

  • காமவல்லி' என்ற படத்துக்குக் கதை வசனம் எழுதித்தர

ஒப்பந்தம் செய்துகொண்டார். புதுமைப்பித்தனுக்குக் காமவல்லியில் கிடைத்த பணம் ஜெமினியிலிருந்து கிடைத்ததைவிட அதிகம்..

  • காமவல்லி' திரைக் கதைக்கான ஏற்பாடுகள் நடந்து

கொண்டிருந்த சமயத்தில், ஒரு ருசிகரமான சம்பவம் நடந்தது. காமவல்லி படத்தின் டைரக்டரும், புதுமைப் பித்தனும், நானும் அந்தப் படத்தில் நடிக்கவிருந்த ஒரு நடிகையின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றோம். அந்த நடிகையோ தெலுங்கு பேசும் நபர்'. தமிழ் நாட்டிலே தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகைகளைவிட, நன்றாகத் தமிழ் பேசும் தெலுங்கு நடிகையர்கள் சிலர் இருக்கத்தான் செய் கிறார்கள். ஆனால், அந்த நடிகையோ சுத்தத் தெலுங்கு; கொச்சைத் தமிழ்: கொலைத் தமிழ்! புதுமைப்பித்தன் அவனோடு கதை சம்பந்தமாக ஏதோ பேசுவதற்காகவே செல்ல நேர்ந்தது. அவளது வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறியவுடன் புதுமைப்பித்தன் டைரக்டரைப் பார்த்துச் சொன்னார்: * 'டைரக்டர் ஸார்! எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்த அம்மாதான் கதாநாயகியாக நடிக்கணும்னா, நான் என் கதாநாயகியை ஊமையாகவே மாற்றி விடுகிறேன். வீணாகத் தமிழ் சாக வேண்டாம்! ஆனால் கதாநாயகியை ஊமையாக மாற்றுவதோ, அல்லது வேறு யாரையேனும் கதாநாயகியாக நடிக்க வைப்பதோ இவர்கள் இருவர் அதிகாரத்திலா இருக்கும்? எனவே புதுமைப்பித்தனின் வயிற்றெரிச்சல் நிறைந்த ஹாஸ்யத் இதைக் கேட்டுச் சிரித்ததோடு எல்லோருமே அதை மறந்து விட்டோம். அவ்வை, காமவல்லி என்னும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பம் 1946-ம் வருஷத்தின் முன் பாதியிலேயே புதுமைப்பித்தனுக்குக் கிட்டியது. இதனால், தமக்கு இனி மேலும் மேலும் சந்தர்ப்பங்கள் பெருகும் என நம்பினார் புதுமைப்பித்தன். எனவே தமது எதிர்