பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திம காலம் காட்டி வரும் ஆர்வம் பெரிது. அவருக்குப் புதுமைப் பித்தன் தமது அந்திம காலத்தில் ஒரு கடிதம் எழுதினார்: தேதி: 17-8-48

  • '... கடந்த இரு வருடங்களாக' எனக்குப் பொல்லாத

காலம். இப்போது நோய் என்னைப் படுக்கையில் போட்டு விட்டது. துரதிருஷ்டமான இந்த நோய் உடல் நிலை தளர்ந்திருந்த காலத்தில் என்னைப் பிடித்துக் கொண்டது. நான் அப்போது பாகவதரின் படத்துக்காகப் புனா சென் றிருந்தேன், இப்போது எனது பண நிலை மகா மோசமாகி விட்டது. நான் நோயினின்றும் குணமடைவதற்காக யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களும் வாசகர்களும் எனக் குப் பண உதவி செய்ய முடியுமா? இதைப் பற்றிச் சிந்தித்து உடனே பதில் எழுதுக.... இதேபோல் சென்னை, தமிழ்ப் புத்தகாலயம், கண், முத்தையாவுக்கும் புதுமைப்பித்தன் ஒரு கார்டு. எழுதி யிருந்தார். அதுவும் மே மாத மத்தியில் தான். “எந்தச் சிறு தொகையும் இந்த நேரத்தில் பேருதவியாயிருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிறகு, 24-6-48ந் தேதியன்று திருவனந்த புரம் எஸ். சிதம்பரம் என்னும் நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார், நான் அப்போது திருநெல்வேலியில் இருந் தேன். வந்தவர் எனக்கும் இதுபோன்ற ஒரு செய்தியைத் தான் புதுமைப்பித்தனிடமிருந்து கொண்டு வந்திருந்தார். தமிழ் நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது.. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று - சாகக் கிடக் கிறேன். வறுமையால் சாகக் 'கிடக்கிறேன். எனவே தமிழ் நாட்டாரைப் பார்த்து .. ' நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்' என்று கேட்க எனக்கு உரிமை உண்டு. நீ மற்ற எழுத்தாளர்களோடு கலந்து கொண்டு என் நிலை யைப் பற்றிப் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு, பு,பி.6