பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 புதுமைப்பித்தன் கவிதை பற்றி தீர்க்கமான நோக்கும் திட்ட வட்டமான கருத்துக்களும் கொண்டிருந்தார். அவைபற்றி எழுதியும் இருக்கிறார்.

‘கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சனங்கள் என்ன?

கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கியமான பாகம், அதன் ஜீவ சக்தி, அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத் தான் இருக்கிறது.

கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு என்றேன். அவை ஒவ்வொன்றும் அவசியம்தான். ஒன்று குறைந்தால் அது பொக்காக இருக்கும். ஆனால் அவற்றின் கூட்டுறவுடன், கவிஞனின் சக்தி லயப்படுகிறதினால்தான் கவிதை பிறக்கிறது. கவிதையின் ஜீவன் சிருஷ்டி சக்தி.

கவிதை மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை. உள்ளப் பாற்கடலில் பிறந்த அமிர்தகலசம். மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு. அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சிவசப்பட்டு, வேகத்துடன் வெளிப்படுகிறது. அதுதான் கவிதை'

‘கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகசியங்களை வேறுவிதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள்; கனவுக் கண்கள். குழந்தையின் களங்கமற்ற உள்ளத்துடன், அதிசயத்துடன் பார்க்கிறான். குததூகலமோ துக்கமோ பிறக்கிறது. அந்த அனுபவம்தான் கவிதை’

‘கவிதை ஒரு அனுபவம். அதாவது அனுபவத்தை உணர்த்தும் சித்திரம். உண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லு கிறான், செவிதுகர் கவிகள் என்று. கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும். கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு