பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதுமைப்பித்தன் காவியேறிக் கறுத்துப் போகாவிட்டாலும், பளபளப்பு இழந்து மஞ்சள் பாரித்திருக்கும் பெரிய பற்கள். அவரது உதடுகள் பெரியவை. கீழுதடு மிகவும் தடித்துப் போன உதடு, அதிலும் வெற்றிலைப் போட்டுப் போட்டு கீழுதடு மேலும் தடிப்பேறி, ஒரளவு சரிந்து தொங்குவதுபோலிருக்கும். எனவே வாயின் முன்வரிசைப் பற்கள் அநேகமாக வெளியே தெரிந்தவண்ணமே இருக்கும். நெஞ்சு பிரம்புக்கூடை மாதிரி சதைப்பற்றற்று, கூடாடிப் போய் தட்டையாக இருக்கும். கை கால்கள் எல்லாம் மிகவும் ஒல்லியாகி, வயதுக்குமீறிய முதுமை தட்டித் தோன்றும். புதுமைப்பித்தன் பேசும்போது தலையை ஆட்டியாட்டிப் பேசுவார். எதிரிலுள்ளவர்கள் பேசும்போதும் அந்தத் தலையாட்டம் நிற்காது. தலையசைப்போடு அடிக்கடி தலைமயிரையும் கோதிவிட்டுக் கொள்வார். அவரது வாயில் எப்போதும் சிரிப்பும் சிவப்புமாகவே இருக்கும். வெற்றிலையைப் போட்டு அண்ணாந்து இருந்துகொண்டு கடகடவென்று சிரிப்பார். அவரது சிரிப்பு பொய்ச் சிரிப்பல்ல. மனம் திறந்த பிள்ளைச் சிரிப்பு. எனினும் புதிதாகக் கேட்பவனுக்கு ஒரு கணம் எரிச்சலையோ, அருவருப்பையோ தரும் பேய்ச் சிரிப்பு. வெடிக்க வெடிக்கச் சிரிப்பார். அவரது சிரிப்பு வெறும் மகிழ்ச்சியின் அறிகுறியாக மட்டும் விளங்குவதில்லை. சமயங்களில் தம்முடன் பேசிக் கொண்டிருக்கும் எதிர் நபரின் அறிவை அளந்துபார்க்கும் அளவு கோலாகவும், எதிரி விடுத்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்பதை அடுத்துச் சிந்திக்கும் முயற்சியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் மறைக்கும் திரையாகவும் பயன்படும். எப்போது பார்த்தாலும் அவர் பேச்சிலே சளைக்கமாட்டார். தலைக்குமேல் எழுத்து வேலைகளோ இதர வேலைகளோ இருந்தாலும் கூடப் பேச்சுக்குமட்டும் பின்வாங்கமாட்டார். சில சமயங்களில் அவருக்குப் புகையிலைக் கமறலாலோ, அதிகப் பேச் சினாலோ தொண்டைக் கமறலெடுத்து, இருமலும் புகைச்சலும் எழும்பி, கண் விழியில் நீர் பிதுங்கும். அப்படியிருந்தாலும்கூட, இருமல் நின்ற பிறகு ஒரு மடக்குத் தண்ணிர் குடிப்பார். வெற்றிலை போடுவார். மீண்டும் பேச்சைத் தொடங்கிவிடுவார். பேசுவதற்கு இதுதான் விஷயம் என்ற நியதி அவரிடம் கிடையாது. பழைய இலக்கியம், புதிய இலக்கியம், சங்கீதம், சோதிடம், சித்த வைத்தியம், சித்தர் பாடல்கள், திருமந்திரம், கம்பராமாயணம், காம சம்பந்தமான இலக்கியங்கள், விவகாரங்கள், ஊர் வம்பு-எதைப் பற்றித் தான் பேசுவது என்பதில்லை. ஒன்றுமற்ற விவகாரத்தைப் பேசி னாலும் வாய் ஒயாமல் பேசுவார். அதே மாதிரி, கேட்கிறவர்களின்