பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலவிவரங்கள் 8 f தலையே கிறுகிறுத்துப் போகும்படி மிகவும் நுண்மையான அபூர்வமான விஷயங்களையும் தத்துவங்களையும் பற்றி அவர் பேசுவார். அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியுமோ இல்லையோஆனால், கேட்கிறவர்களிடம் ஆணித்தரமாக அறைந்தாற்போலத்தான் பேசுவார். புதுமைப்பித்தனுக்குச் சாப்பாட்டைவிட, பேச்சில்தான் பிரியம் அதிகம். அதைவிட வெற்றிலை போடுவதில் மிகுந்த பிரியம். வெற்றிலை, காப்பி, பேச்சுத்துணைக்கு ஆள்-இத்தனையும் இருந்து விட்டால், சாப்பாட்டில்கூட அவருக்கு நாட்டம் செல்லாது. அவர் சாப்பிடுவதும் அப்படி ஒன்றும் அதிகமாக இராது. காக்கைக்கு சோறு வைத்த மாதிரி, இரண்டு கவளம் சாப்பிடுவார். இருந்தாலும் சுசிருசியாக இருக்கவேண்டும் என எண்ணுவார். வெற்றிலை போடும் பழக்கம் அவரை இளமையிலேயே பிடித்துக் கொண்டது. வெற்றிலையைத் தவிர, எப்போதாவது சிகரெட்டோ, நல்ல உயர்ந்த ரகச் சுருட்டோ குடிப்பார். சிகரெட் குடிப்பதில் அவருக்கு அதிகப்படியான பழக்கமோ ரசிப்போ இருந்ததாகச் சொல்லமுடியாது. இருந்தாலும் நல்ல உயர்ந்த ரகமான சிகரெட்டுகளையே பிடிப்பார். புதுமைப்பித்தன் கதையோ கட்டுரையோ எழுதும்போது நிதானமாக ஆர அமர. இருந்து எழுதமாட்டார். பேனாவை எடுத்து விட்டால், அந்தப் பேனாவுக்குள் எங்கிருந்தோ ஒரு அசுர வேகம் வந்து புகுந்துவிடும். விறுவிறு என்று மெயில் வேகத்தில் கை ஒடும். இடையில் வெற்றிலை போட்டுக்கொள்ளும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எழுதுவதில் ஸ்தம்பிப்பே ஏற்படாது. புதுமைப்பித்தனின் கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளக் கூடிய பூப்போன்ற எழுத்துக்கள் அல்ல. என்னவோ சுருக்கெழுத்து எழுதிய மாதிரி இருக்கும். அங்குமிங்கும் கோடுகள் தெரிவது மாதிரி தான் பிரமை தோன்றும். சிலருக்கு தலையெழுத்து நன்றாக இல்லா விட்டாலும் கையெழுத்து மட்டும் மணிமணியாக இருக்கும். புதுமைப் பித்தனின் கையெழுத்தோ அவரது தலையெழுத்தைவிட மோசமாக புதுமைப்பித்தனுக்குத் தமது எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு, தம்முடைய கதைகளை அவர் குழந்தைகளைப்போல் புனிதமாகவும் அன்போடும் மதித்துப் பேசுவார். புதுமைப்பித்தன் தமது எழுத்தின் மதிப்பை உணர்ந்து பேசுவார். அதை விமர்சனம் செய்தால் கேட்பார். குறைத்துப் பேசுவதாகத் தோன்றினால் சீறியெழுந்துவிடுவார்: (ரகுநாதன்).