பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35:முருகுசுந்தரம் நான்காவது நாள் திரளாக மண்டபத்தில் கூடினர். நானே உள்ளே நுழைய முடியாதவாறு கூட்டம்! அதன் பிறகு இராஜா. சர். முத்தையாசெட்டியாரையும், நிதிக் கட்சித் தொடர்பும் தமிழ்ப்பற்றும் உடைய புதுக்கோட்டை முஸ்லீம் அமைச்சர் ஒருவரையும் விழாவிற்கு அழைத்து வந்தோம்.விழா எதிர் பார்த்த தற்கு மேல் சிறப்பாக முடிவுற்றது. தமிழ்நாட்டின் தெற்கில் ஒரு சிற்றுாரில் வாழ்வதை விடச் சென்னை போன்ற பெரிய நகரத்தில் இருந்தால் இலக்கியப் பணிகளை விரிவாகச் செய்ய இயலும் என்ற எண்ணம் அடிக்கடி என் உள்ளத்தில் தோன்று வதுண்டு. என் விருப்பத்தைச் சென்னைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளருக்குத் தெரி வித்தேன். அவருக்கு என்னைப் பிடித்திருந்தாலும், என் கலப்பு மணத்தைப் பிடிக்கவில்லை. சாதியில்லாத உம் மனைவியை நீக்கி விட்டு வந்தால். உங்களுக்கு வேலை தருவதோடு சென்னையில் தங்க எல்லா வசதிகளும் செய்து தருகிருேம்’ என்று கடிதம் எழுதியிருந்தார். மேலே குறிப்பிட்ட எல்லாச் செய்திகளையும் பாரதிதாசனிடம் எடுத்துச் சொன்னேன். சென்னை சென்றுல் இலக்கியத்துறையில் நான் வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த பாரதிதாசன் என்னை எப்படியும் சென்னை கொண்டு செல்ல முடிவு செய்தார். சென்னை சென்றதும் பாரதிதாசன் முத்தமிழ் நிலையத்தைத் துவக்கினர். நிலையத்துக்கென்று தனி வீடும் வாடகைக்கு எடுக்கப்பட்டது. முத்தமிழ் நிலையம் துவக்கப்பட்ட ஆரும் நாள் சென்னை புறப்பட்டு வரும் படி பாரதிதாசனிடமிருந்து கடிதம் வந்தது. கடிதம் வந்ததும் நான் iசன்னை புறப்பட்டேன். அன்று புகைவண்டியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதே நாளில் சென்னையின் மீது ஜப்பானியரின் குண்டு வீச்சு தடைபெற்றது. இரண்டாம் உலகப்போர் தடை பெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அடுத்த நாள் செனனை புறப்பட்டேன். முத்தமிழ் நிலேயக் கட்டிடத்தில் தங்குவதற்கு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்சென்னை சென்றிருந்த நேரத்தில் திராவிடர்க்கழகத் துக்கு ஒரு பொதுச்செயலாள ைநியமனம் செய்யும்