பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்/88 சிலபோல வீற்றிருக்கச் சிறியேன் அவர்திருமுன் குலம்பாடி நலம்பாடக் குறுக்கிட்டேன் மன்னிப்பீர்.” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நான் கவிதை பொழிந்தேன். இளங்கவிஞர்களின் கவிதைகளைத் தலையசைத்துச் சுவைத்து மகிழ்ந்தார் பாவேந்தர். தொடர்ந்து கருத்தரங்கம் நிகழ்ந்தது. 蠶 நிகழ்ச்சி, சிறப்புச் சொற் பொழிவுகள். ரஷ்யப் பெண் மணி இசபெல்லாவின் உரை. பாவேந்தர் தம் உரை நிகழ்த்தக் காத்திருந்ததில் ஓரளவு பொறுமை இழந்து போயிருந்தார். இதனிடையே அவருக்கு முன்பே ಶ್ಗಳ್ಗಿ சிலர் அவரை ஆளியாறு அணைக் கட்டுக்குப் போய் வந்துவிடலாம் என்று அவரை விழாவை விட்டு அழைத்துப் போய்விடத் திட்டமிட்ட னர். விழாப் பொறுப்பாளர்களான எங்களுக்குக் கிடைத்தற் கரிய நிதி கை நழுவிப் போய்விடக் கூடாதே என்ற அச்சம் வந்து விட்டது. அதல்ை மற்ற பேச்சாளர்களை விரைவு ப்டுத்திைேம். எனினும் இர்வாகி விட்டது. பாவேந்தர் பேசத் தொடங்கும், போது, பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆவுலோடு காத்திருந்தனர். அப்படி யொரு கூட்டத்தை, ஓர் இலக்கியவிழாவுக்கு வரை பொள்ளாச்சி ந்கரம் சந்தித்ததில்லை. షీaఫీ தம் பேருரையில் பாரதியோடு தமக்கேற்பட்ட உறவை யும், அன்பையும் உணர்ச்சியோடு எடுத்தியம்பினர். பாரதி பாடல்கள் பலவற்றை எப்படிப்பாடவேண்டும் என்று பாடிக் காட்டினர். சில பாடல்கள் பிழையாகப் பதிக்கப்பெற்றிருப்பதாகவும் மொழிந்தார். உரையாடல் போலவும், இசை நிகழ்ச்சி போலவும்ஒரு சொற்பொழிவு போலல்லாமல்-ஒரு கலை நிகழ்ச்சி போலவும் பாவேந்தர் உரை அமைந்தது. கோல்கைக் கொண்டு வாழ்’ என்ற பாரதி வரியைத் தவருகப் புரிந்து கொண்ட சுதேசமித்திரன் பத்திரிக்கையைக் கேலி செய்தார். கதாகாலட் சேபங்கள் கீர்த்தரைம்பத் திலே’ என்று தொடங்குவதை எடுத்துக்காட்டி "ஒரு