பக்கம்:புது டயரி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 s புது ட்யரி

சுவராகிவிட்டது. எழுதவே வரவில்லை” என்று அதை மேஜை மேலே விட்டெறிந்தேன். “ஆமாம்! நான் தொட்டால் குட்டிச் சுவராகத்தான் ஆகும்” என்று சொல்லி விட்டு அவள் உள்ளே போய்விட்டாள். இரண்டு நாட்களாயின, அந்தக் கோபம் ஆற.

“பைத்தியமே, என் பேனாவ எடுக்கக் கூடாது என்று சொன்னதன் அர்த்தம் உனக்குத் தெரியவில்லையே! ஒவ்வொருவருடைய எழுத்தும் ஒரு மாதிரி. பேனா முள்ளில் பிளவு இருக்கிறது. இரண்டு பிளவாக இருப்பது உனக்குத் தெரியுமே சில பேர் இடது பக்கமாகச் சிறிது சாய்த்து எழுதுவார்கள். அந்தப் பேனா முள்ளில் இடது பக்கம் அழுந்திச் சற்றுத் தேயும். அப்படியே வலப்பக்கமாக எழுதுகிறவர்கள் பேனா முள் வலப்பக்கமாகச் சற்றுத் தேயும். ஒருவர் பேனா மற்றவருக்குச் சரியாக எழுதாது. அப்படி எழுதினால் பழைய நிலை மாறி இரண்டு பேருக்கும் சரியாக எழுதாமல் போய்விடும்” என்று அவள் சாந்தமாக இருக்கும்போது பேனாத் தத்துவத்தைப்பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றினேன்.

“அதனால்தான் உங்கள் பேனாவினால் நான் எழுதும் போது என் எழுத்து மோசமாக இருக்கிறதோ?” என்று அவள் கேட்டாள். நான் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டாள். ஆனால் தன்னுடைய நல்ல எழுத்து என் பேனாவினால் மோசமாகி விட்டதாம்!

என்றாலும் நான் இல்லாதபோது என் பேனாவை எடுத்து எழுதும் சபலம் அவளுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது; எடுத்து எழுதுகிறாள். நான் என்ன செய்வது: இதைவிட வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/103&oldid=1151524" இலிருந்து மீள்விக்கப்பட்டது