பக்கம்:புது டயரி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுகோலின் அவதாரங்கள்

97

 நான் பல ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் பரீட்சை எழுதினேன்; 1933-ஆம் ஆண்டு அந்தப் பரீட்சையில் நான் மாகாணத்தில் முதல் வகைத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் காசிமடத்துப் பரிசாகிய ஆயிர ரூபாயைப் பெற்றேன். அப்போது பார்க்கர் ஜூனியர் பேனா ஒன்று வைத்திருந்தேன். அதைக் கொண்டு பரீட்சை எழுதினேன்.

பரிசு பெற்ற பிறகு அந்தப் பேனாவிடம் எனக்கு மதிப்பு அதிகமாயிற்று. “இது ஆகிவந்த பேனா; எனக்குப் பரிசு வாங்கிக் கொடுத்தது” என்று என் நண்பர்களிடம் சொல்வேன். பிறகு என் மனைவியிடமும் அதைச் சொன்னேன். அந்தப் பேனாவை ஜாக்கிரதையாகப் பெட்டியில் வைத்திருந்தேன். பல ஆண்டுகள் ஆயின. எனக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிடமும், “அந்தப் பேனா ஆகிவந்த பேனா” என்று சொல்லி அதன் மகிமையை விவரித்தேன்.

என் மூத்த மகனுடைய நண்பன் ஒருவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தது. நான் பரீட்சையில் வெற்றி பெற்றதோடு பரிசையும் பெறும்படி செய்தது அந்தப் பேனா என்பதை என் மகனே அவனுக்குச் சொல்லியிருப்பான். தந்தையின் புகழைச் சொல்லும்போது மகன் பெருமிதத்தோடு சொல்வது இயல்புதானே? அந்தப் பையன் எஸ். எஸ். எல்.ஸி படித்துக் கொண்டிருந்தான். முதல் வருஷம் பரீட்சையில் தோல்வியடைந்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. என் மகனிடம், “இரண்டாம் முறை பரீட்சை எழுதப் போகிறேன். உன்னால் ஒர் உபகாரம் ஆகவேண்டும்” என்றான். “என்ன வேண்டும்?” என்று என் மகன் கேட்டான்.

“உங்கள் அப்பா அந்த ஆகிவந்த பேனாவை உள்ளே தானே வைத்திருக்கிறார் அதை அவருக்குத் தெரியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/104&oldid=1151526" இலிருந்து மீள்விக்கப்பட்டது