பக்கம்:புது டயரி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

புது டயரி


எடுத்து வந்து கொடு. ஒரு வாரம் வைத்திருந்து பரீட்சை எழுதிவிட்டுப் பிறகு பத்திரமாகக் கொடுத்து விடுகிறேன். அது ஆகிவந்த பேனா அல்லவா? எனக்குப் பரீட்சை நிச்சயமாகப் பாஸ் ஆகும்” என்றான். என் மகன் அவன் வேண்டுகோளை நிறைவேற்றினான்.

பையன் ஆகிவந்த பேனாவைக் கொண்டு பரீட்சை எழுதினான். பேனா மறுபடியும் இருந்த இடத்துக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தது. பரீட்சை எழுதிய பையன் நிச்சயமாக்த் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருந்தான். ஆனால்—? பரீட்சை முடிவு வந்தது; பழையபடி தோல்வி தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/105&oldid=1151529" இலிருந்து மீள்விக்கப்பட்டது