பக்கம்:புது டயரி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

புது டயரி

 (பொன்—பொன்னாலான நகைகள். புனையா—அணிகலன்களை அணியாத. மற்று—அசை. மின்னும் அணி—ஒளி வீசுகின்ற நகையை. பிற உறுப்பு—கண் அல்லாத வேறு அங்கங்கள். பொன்னே—திருமகளைப் போன்ற பெண்ணே! ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது பாட்டு; இதை மகடூஉ முன்னிலை என்பார்கள். அது புனையா—அந்த நகையை அணியாத.)

சிவப்பிரகாசர் இந்தக் காலத்தில் வாழ்ந்தால் இதைப் பாடியிருக்கமாட்டார். ஏன் தெரியுமா? அவர் காலத்தில் கண்ணுக்கு ஆபரணம் கிடையாது. இப்போது முக்குக் கண்ணுடி வந்து விட்டதே முக்குக் கண்ணாடி கண்ணுக்கு அணிகலமாகி விட்டதை நானே ஒரு கிறளில் பாடியிருக்கிறேன்

பண்ணார் கிராப்பில்லாத்
தலையிற் பயன்இலவே,
கண்ணாடி போடாத கண்.

கண்ணுக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் அழகென்று இப்போதெல்லாம் எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். கண்ணாடி போட்டுப் பழக்கப்பட்டவர்களே அது இல்லாமல் இருக்கும்போது சில சமயங்களில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஒரு நண்பர் வீட்டுக்குப் போனபோது கண்ணாடியைக் கழற்றிப் பையில் வைத்துக் கொண்டேன். அவர் என்னைக் கண்டவுடன், “உங்களுக்கு என்ன உடம்பு” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லையே!” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/107&oldid=1151538" இலிருந்து மீள்விக்கப்பட்டது