பக்கம்:புது டயரி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணுக்கு அணிகலன்

101

 “இல்லை, இல்லை. நீங்கள் மறைக்கிறீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. உங்கள் உடம்புக்கு ஏதோ கோளாறு” என்று மறுபடியும் சொன்னார்.

“எனக்குப் போன மாதம் சிறிது ஜலதோஷம் வந்தது. அதற்கப்புறம் ஒன்றுமே வரவில்லையே”

நண்பர் ஒப்புக்கொள்ளவில்லை. திடீரென்று எனக்கு ஒரு நினைவு வந்தது பையில் இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டேன். பிறகு அவரைப் பார்த்து, “இப்போது என்னப் பாருங்கள்” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே, “அடடா! ஏமாந்து போய் விட்டேனே! இந்தக் கண்ணாடி இல்லாமல் உங்கள் முகம் நன்றாக இல்லை. அது எனக்குத் தெரியவில்லை. ஏதோ அசெளக்கியம் என்று நினைத்தேன். இப்போதுதான் உங்கள் முகம் உங்கள் முகமாக இருக்கிறது” என்றார்.

‘அப்படியானால் கண்ணாடி போடாத முகம் என் முகம் அல்லவா? அது என்ன பேய் முகமா? அல்லது மூதேவி முகமா?’ என்று கேட்கலாமா அவரை?

மூக்குக் கண்ணாடி என்று நாம் சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஆங்கிலத்தில் ஒரு கவிதை உண்டு. மூக்குக் கண்ணாடி மூக்குக்குச் சொந்தமா, கண்ணுக்குச் சொந்தமா என்று ஒரு விவாதம் எழுந்ததாம். கடைசியில் இரண்டுக்கும் சொந்தம் என்று தீர்மானம் ஆயிற்றாம். தமிழில் இந்த விவாதத்துக்கே இடமில்லை. மூக்குக் கண்ணாடி என்ற பெயரில் மூக்கும் இருக்கிறது; கண்ணும் இருக்கிறது,

நான் பலகாலம் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ளவில்லை. என் ஆசிரியப் பெருமானிடம் தமிழ் கற்றுக் கொண்டபோது இரவெல்லாம் ஒலைச் சுவடிகளைப் படிப்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/108&oldid=1151540" இலிருந்து மீள்விக்கப்பட்டது