பக்கம்:புது டயரி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

புது டயரி

 துண்டு; புரூப்புகள் பார்ப்பதுண்டு. ஒவ்வொரு நாளும் இந்த வேலைகள் இருக்கும். ஆனாலும் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு துாரப் பார்வை தெரியவில்லை. நெடுந்துாரத்தில் உள்ள தென்ன மரத்தின் ஒலைகள் தனித்தனியே தெரியவில்லை. யாராவது நெடுந்தூரத்தில் வரும்போது பார்த்தால் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. கண் கெட்டுவிட்டது என்பதை நினைக்கும்போதே எனக்குப் பகீரென்றது. குருடனாகி விட்டேன் என்று எண்ணி வருந்தினேன்.

கண் டாக்டரிடம் சென்று கண்ணைக் காட்டினேன். எதாவது மருந்து போட்டுச் சரிப்படுத்திவிடுவார் என்ற நைப்பாசை இருந்தது. அந்த மனிதர் கறுப்புக் கறுப்பாகப் பெரியதும் சின்னதுமாக எழுத்து உள்ள அட்டையைச் காட்டிப் படிக்கச் சொன்னார். பள்ளிக் கூடத்தில் அரிவரி வகுப்பில் கூட இப்படி நான் எழுத்துக் கூட்டிப் படித்ததில்லை. இப்போது படித்தேன். அவர் பக்கத்தில் வாத்தியார் மாதிரி நின்று கொண்டு, “ஹூம்; படியுங்கள்; அடுத்தவரி; இன்னும் கீழே” என்று உத்தரவிட்டார். நான் படித்த காலத்தில் வாத்தியார்கள் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள். இந்த வாத்தியாரிடம் அது இல்லை. நான் படித்துக்கொண்டே வந்தேன். கீழே போகப் போக எழுத்துச் சிறியதாக இருந்தது. அது தெரியாவிட்டால் டாக்டர் கண்ணில் இருந்த பிரேமில் உள்ள சில்லை மாற்றி வேறொரு கண்ணாடிச் சில்லைச் செருகுவார்; “இப்போது படித்துச் சொல்லுங்கள்” என்பார். இப்படி என்னுடைய படிக்கும் ஆற்றலைப் பரீட்சித்து மார்க்குப் போட்டார். இரண்டு கண்களும் -2 என்று எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். ‘நீ குருடு’ என்று தீர்ப்பெழுதின சாசனம் போல இருந்தது அது. கண்ணீர் விட்டு அழுதேன். ‘முருகா! என்னை இப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/109&oldid=1151542" இலிருந்து மீள்விக்கப்பட்டது