பக்கம்:புது டயரி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணுக்கு அணிகலன்

103

 குருடாக்கி விட்டாயே!’ என்று முறையிட்டேன். சில பாடல்களைப் பாடினேன். என்ன பாடினால் என்ன? நான் என்ன ஞானசம்பந்தரா? சுந்தரமூர்த்தி நாயனரா? என் பாட்டினால் அற்புதம் நிகழுமா? ‘சரி, நம் தலைவிதி’ என்று எண்ணிச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

கண்ணாடிக் கடைக்குப் போய் டாக்டர் கொடுத்த குறிப்பைக் கொடுத்தேன். “மிகவும் மோசமான பார்வையோ?” என்று கடைக்காரரைக் கேட்டேன். “மோசமா? என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? இது மிகவும் சாதாரணம் ஆனது. சோடாபாட்டில் கண்ணாடிகள் போடுகிறவர்களெல்லாம் இருக்கிறார்களே!” என்று சொன்னபோது எனக்குச்சிறிது ஆறுதல் உண்டாயிற்று. நம்முடைய குறையைப்போல மற்றவர்களுக்கும் இருக்கிறதென்று அறியும் போது இந்த மனித மனத்துக்குத்தான் எத்தனை திருப்தி உண்டாகிறது! நம்மைவிட மற்றவர்கள் குறை பெரிதென்றால், நமக்குக் குறையே இல்லை என்பது போன்ற திருப்தி பிறக்கிறது. குறை குறைதானே? அப்படி இருக்க, இந்தப் பைத்தியக்கார ஆறுதலால் என்ன பயன் ஆனாலும் மனித சுபாவம் அப்படித்தான் இருக்கிறது. நுாற்றுக்கு இருபது மார்க்கு வாங்குகிற பையன் தன்னவிட அதிகமாக ஐம்பது அறுபது என்று வாங்குகிறவர்களைப் பார்த்து வருந்துவதில்லை. பத்து மார்க்கு வாங்கியிருக்கிறானே, அவனப் பார்த்து, “நாம் எவ்வளவோ மேல்” என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.

இரண்டு நாள் கழித்துக் கண்ணாடிக் கடைக்காரர் கண்ணாடியைத் தந்தார். அதை அணிந்து கொண்டேன்; அணிவதாவது, மண்ணாங்கட்டியாவது தலைவிதியே என்று போட்டுக் கொண்டேன். கண் பார்வை நன்றாகத் தெரியும் என்பதற்காகத்தானே கண்ணாடி போட்டுக்கொண்டேன்? இப்போது என்னாயிற்றுத் தெரியுமோ? தலைவலி போய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/110&oldid=1151544" இலிருந்து மீள்விக்கப்பட்டது