பக்கம்:புது டயரி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணுக்கு அணிகலன்

105

 அவர் சொன்னது சரிதான் என்று பிறகு தெரிய வந்தது.

யாராவது கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால், “உங்கள் கண்ணாடி மைனஸ் எத்தனை ஸார்?” என்று கேட்பேன். “மைனஸ் மூன்று” என்பார்; எனக்குச் சிறிது ஆறுதல் பிறக்கும். “மைனஸ் எட்டு” என்று ஒருவர் சொன்னார். அப்போது எனக்கு ஒரே ஆனந்தம்; எனக்கு மிகவும் வேண்டியவர், “எனக்கு மைனஸ் பன்னிரண்டு” என்றார். அதைக் கேட்டபோது எனக்குப் பழைய பார்வையே வந்துவிட்டது போன்ற திருப்தி, குதூகலம் உண்டாயிற்று.

ஐம்பது வயசுள்ள நண்பர் ஒருவரைக் கண்டேன். அவர் கண்ணாடி அணிந்திருந்தார். “உங்கள் கண்ணாடி மைனஸ் எவ்வளவு?” என்று வழக்கப்படி கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “மைனஸா? எனக்கு ப்ளஸ் இரண்டு” என்றார்.

அவர் எனக்கு விஷயத்தை விளக்கினர். எனக்குத் துாரத்துப் பொருள் தெரியாமல் இருந்தது. அவருக்குத் துாரத்துப் பொருள் நன்றாகத் தெரிகிறதாம்; புத்தகம் படிக்க முடியவில்லையாம்; அவருக்கு லாங் லைட் (Long Sight); எனக்கு ஷாா்ட் சைட் (Short sight). நான் குறுகிய பார்வை உடையவனாம்!

அவர் தமக்குச் சாளேச்வரம் வந்திருப்பதாகச் சொன்னார். பல கிழவர்கள் சாளேச்வரம் வந்துவிட்டதென்று கண்ணாடி அணிந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது என்ன சாளேச்வரம்? ராமேசுவரத்துக்கு இனமா? பிறகு அகராதியை எடுத்துப் பார்த்தேன். நாற்பது வயசுக்குமேல் வரும் வெள்ளெழுத்துக்குச் சாலேசரம் என்று பெயராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/112&oldid=1151566" இலிருந்து மீள்விக்கப்பட்டது