பக்கம்:புது டயரி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தலையசைத்தால் போதும்!

கலைகள் யாரால் வளருகின்றன? இந்தக் கேள்விக்கு இரண்டு வகையான விடைகள் உண்டு. கலைஞரால் கலைகள் வளருகின்றன என்பது ஒரு விடை, ரசிகர்களால் கலைகள் வளருகின்றன என்பது மற்றொரு விடை, இரண்டும் சரி தான்.ஆனால் யாருடைய பங்கு அதிகம்? இந்தக் கேள்விக்கு யோசிக்காமல் உடனே பதில் சொல்ல முடியாது. தாயும் தங்தையும் வளர்ப்பதனால் குழந்தை வளர்கிறது. தாயின் பங்கு அதிகமா, தந்தையின் பங்கு அதிகமா? என்று கேட்டால் என்ன சொல்வது? அது போன்றதுதான் அந்தக் கேள்வியும்.

அந்த உவமையைவிட வேறு ஒர் உவமையைச் சொல்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றோர் வளர்க்கிறார்கள்; அருமையாக வளர்க்கிறார்கள். பிறகு ஒரு நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார்கள். பெண்ணின் வாழ்க்கையின் ஆரம்பப் பகுதி பெற்றோர்களால் வளம் பெறுகிறது; ஆனால் அதோடு நின்றுவிட்டால் போதாது. அந்தப் பெண்ணின் வாழ்வு முழுமை பெறுவது அவளுடைய கணவனால்தான். கலைஞனைக் கலையின் தகப்பனாகக் கொண்டால் ரசிகனாகக் கலையின் மணவாளனாகக் கொள்ளலாம். கலை என்ற பெண் முழுமை பெறவேண்டுமானால் ரசிகன் வேண்டும். கலையை அநுபவிக்க ஆள் இல்லாவிட்டால் கலைஞன் கலையை உற்பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/126&oldid=1152399" இலிருந்து மீள்விக்கப்பட்டது