பக்கம்:புது டயரி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

புது டயரி

 செய்ய முந்துவானா? அப்படியானால் கலை முழுமைபெற ரசிகர்களின் ஆதரவு மிகுதியாக வளர்ந்து வரவேண்டும் என்று தெரிகிறது.

இதை நான் ஏதோ புதியதாகச் சொல்லி விடவில்லை. கலைஞர்களே தங்கள் கலை வளர்ச்சிக்குக் காரணம் ரசிகர்கள் என்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

பேச்சுக் கலையில் வல்லவர் ஒருவர் இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்க ஆள் இல்லாவிட்டால் அவருக்கு உற்சாகம் உண்டாகுமா? கேட்கிற ஆள் வெறும் ஆளாக இருந்தால் பயன் இல்லை; கேட்டுச் சுவைக்கும் ரசிகனாக இருக்கவேண்டும். அப்போது பேசுகிறவனுடைய கலை வளரும். இதைத் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘ஒரு பாத்தியில் செடி வளர்கிறது; மழை பெய்வதனால் தானே வளருகிறது. அந்தச் செடிக்குத் தண்ணீரும் விட்டால் அது எப்படிச் செழித்து வளரும்? அதுபோலத் தான், சொல்வதை உணர்ந்து சுவைப்பவர்களின் முன்னலே ஒன்றைச் சொன்னால் அது வளரும் என்கிறார் அவர்.

“உணர்வது உடையார்முற்
சொல்லல், வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிங் தற்று.”

கேட்கிறவர்கள் எல்லாரும் ரசிகர்களாக இருப்பதில்லை. தரம் அறிந்து ரசிப்பவர்கள், கூட்டத்தில் சிலரே இருப்பார் கள். அவர்களுக்காகவே கலைஞன் தன் கலை நுட்பத்தைக் காட்டுவான். வெறும் ஜடமாக இருப்பவர்கள்முன் பாடவோ, பேசவோ நேர்ந்துவிட்டால் அதைவிட நரகம் கலைஞருக்கு வேறு இல்லை. அதனால்தான் ஒரு வடமொழிக் கவிஞர் பாடினர்; ‘எ பிரம்மாவே, என் தலையில் எதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/127&oldid=1152401" இலிருந்து மீள்விக்கப்பட்டது