பக்கம்:புது டயரி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையசைத்தால் போதும்

123

 மாக வரும். பேச்சு முடிந்த பிறகு, நாமா இப்படிப் பேசினோம் என்ற வியப்புணர்ச்சி நமக்கே எழும். ரசிகர்கள் அல்லாத கூட்டத்தில் இந்த உணர்ச்சி உண்டாவதில்லை. ஏதோ பேசி முடித்தோம் என்ற அளவிலே திருப்திப்பட வேண்டியிருக்கும்.

என்னுடைய ஆசிரியப் பிரானாகிய ஐயரவர்கள் சொல்வார்கள்: “பேசும்போது கூட்டத்தில் முன் வரிசையில் ரசிப்பவர்கள் இருந்து அவ்வப்போது தம்முடைய முகக் குறிப்பால் மகிழ்ச்சியைக் காட்டினால், சுவாரசியமாகப் பேசவரும். சில பேர்வழிகள் இருக்கிறார்கள்; அவர்கள் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏதாவது பேசினால் அதை ரசிக்கமாட்டார்கள். “நம்மைப் பேசவிட்டால் இதைவிட அழகாகப் பேசலாமே!” என்று எண்ணிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர் உள்ளத்திலே ஓடும் எண்ண ஓட்டம் தெரியும். அந்த விளக்கெண்ணெய் தடவிய முகத்தைப் பார்த்துவிட்டால் நமக்கு இருக்கும் உற்சாகமே குறைந்து போகும். அடிக்கொருதரம் எடுத்துச் சொல்லும் மேற்கோள் பாட்டுக்கூடச் சொல்ல வராது. அந்த மகானு பாவர்களுடைய சந்நிதான விசேஷம் அது என்பார்கள். இது எத்தனை துாரம் அநுபவத்கோடு ஒத்தது என்பதைப் பேச்சாளர்கள் உணர்வார்கள்.

அரியலூர் ஜமீன்தாராகக் கச்சிரங்கன் என்பவர் இருந்தார். அவர் பரம ரசிகர். இசையையும் தமிழையும் தரமறிந்து ரசித்துப் பராட்டுகிறவர். அந்தக் காலத்தில் அரியலூரைச் சுற்றிக் காடாக இருக்கும். எளிதில் அந்த ஊருக்குப் போக முடியாது. என்றாலும் புலவர்கள் கச்சிரங்கனிடம் சென்று தம் புலமையைக் காட்டிப் பரிசு பெற்று வருவார்கள். அந்த ஜமீனில் அவைக்களப் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/130&oldid=1152412" இலிருந்து மீள்விக்கப்பட்டது