பக்கம்:புது டயரி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

புது டயரி


ஒருவர் இருந்தார். அவரிடம் வேற்றுார்ப் புலவர்கள், “இங்கே ஏன் இருக்கிறீர்கள்? வேறு இடங்களுக்குப் போனால் உங்களுக்கு நிறையப் பரிசு கிடைக்குமே!” என்று சொன்னார்களாம். அதைக் கேட்டு அந்த அவைக்களப் புலவர், “நயம் அறிந்து தரம் அறிந்து எங்கள் ஜமீன்தார் தலையை அசைக்கிறாரே, அதைவிடவா பெரிய பரிசு வேண்டும்?” என்றாராம். அந்தக் கருத்தைப் பாட்டாகவே பாடி விட்டார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லை “கச்சிரங் கேத்ரன் சிரக்கம்பம் போதும் இக் காசினிக்கே!” என்பது கடைசி அடி. அதில்தானே பாட்டின் உயிரே இருக்கிறது?

உடையார்பாளையமும் காட்டுக்கு நடுவே இருக்த ஊர். அங்கே இருந்த ஜமீன்தார்களில் யுவரங்கர் என்பவர் ஒருவர். அவரே கவிஞர். வடமொழி, தென் மொழி வல்லவர்களையும் சங்கீத வித்துவான்களையும் ஆதரித்து வந்தார். நயமறிந்து பாராட்டிப் பரிசளிப்பார். அவருடைய அவைக்களப் புலவராக அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் என்ற வடமொழிக் கவிஞர் ஒருவர் இருந்தார். யுவரங்கர் அவரை மிகவும் மதிப்புடன் ஆதரித்து வந்தார்.

அவ்வப்போது பல இடங்களிலிருந்து இசைப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் தமிழ்க் கவிஞர்களும் வந்து யுவரங்கருடன் பழகி அவருடைய உபசாரத்தையும் பரிசையும் பெற்றுச் செல்வார்கள். கொடுக்கும் பரிசு சிறிதானாலும் யுவரங்கர் ரசிக சிகாமணியாக இருந்தமையால் புலவர்களுக்கு அவரைக் கண்டு பழகுவதில் அதிக இன்பம் உண்டாயிற்று.

ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு வடமொழிக் கவிஞர் உடையார் பாளையம் வந்தார்; யுவரங்கரைப் பார்த்தார். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளோடு பழகினார். சாஸ்திரிகளுடைய விரிந்த புலமையையும் கவித்துவத்தையும் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/131&oldid=1152413" இலிருந்து மீள்விக்கப்பட்டது