பக்கம்:புது டயரி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

புது டயரி

 ஒரு நாள் அவன் ஒர் அரச சபையில் தன் வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அரசனும் வேறு பலரும் பார்த்துக் களித்தார்கள்.ஒவ்வொரு வித்தை முடிந்தவுடனும் அரசன் ஒவ்வொரு பரிசை அளித்து வந்தான். அங்கே பார்க்க வந்த கூட்டத்தில் பசு மேய்க்கும் இடையன் ஒருவன் இருந்தான். ஒரு கோலை ஊன்றிக்கொண்டு ஓர் ஒட்டைக் கம்பளியைத் தலையின் மேல் போட்டுக்கொண்டு நின்றபடியே வித்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

கலைஞன் பசுமாடு மாதிரி நடிக்கத்தொடங்கினான். வால் போன்ற ஒன்றைப் பின்னலே செருகிக்கொண்டு அதை ஆட்டிக் காட்டினான். காதைத் தனியே ஆட்டினான். அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடையன் வித்தைக்காரன் அருகில் வந்து என்னவோ செய்தான். அடுத்த நிமிஷம் தன் மேலிருந்த ஒட்டைக் கம்பளியை அவன் மேல் போட்டுவிட்டுப் போய்விட்டான்.

வித்தைகளெல்லாம் முடிந்தன. வித்தைக்காரன் முதலில் அந்தக் கறுப்புக் கம்பளியை எடுத்து மடித்துத் தலையில் வைத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு அரசன் தந்த பரிசுப் பொருள்களை வைத்தான். அரசன் அவன் செயலைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. “அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான். வித்தையாடும் கலைஞன் அரசனிடம் சென்றான்.

“என்ன, நீ என்னை அவமதிக்கிறாய்?” என்று கோபத்தோடு கேட்டான் அரசன்.

“அரசே, நான் ஒன்றும் அவமதிக்கவில்லையே” என்று அஞ்சியபடியே சொன்னான் கலைஞன்.

“அந்த இடையன் போட்ட கம்பளிக்குக் கொடுத்த மரியாதையை நான் வழங்கிய பரிசுகளுக்குக் கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/133&oldid=1152416" இலிருந்து மீள்விக்கப்பட்டது