பக்கம்:புது டயரி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையசைத்தால் போதும்

127


வில்லையே! அந்த ஒட்டைக் கம்பளி உனக்குப் பெரிதாகி விட்டதா?”

“மகாராஜா, மன்னிக்கவேண்டும். தாங்கள் என் வித்தைகளில் எதைச் சிறப்பாகச் சுவைத்தீர்கள்?”

“எல்லாமே நன்றாக இருந்தன. இந்த ஒரு காரியந்தான் போக்கிரித்தனமாகப் படுகிறது.”

“மகாராஜா அவர்களை நான் கேள்வி கேட்பதற்காகக் கோபித்துக் கொள்ளக்கூடாது.”

“என்ன கேட்கப் போகிறாய்? கேள்.”

“அந்தக் கம்பளியைக் கொடுத்தவர் எதைப் பார்த்து ரசித்தார், தெரியுமா?”

“அவன், நீ பசுமாடுமாதிரி நடந்ததை, காதை ஆட்டினதை, முக்காரம் போட்டதைப் பார்த்திருப்பான். அவனுக்குப் பசுமாடுதானே தெரியும்?”

வித்தையாடி நிதானமாகச் சொல்லலானான். “அரசே, அவர் ஒரு நுட்பத்தைக் கண்டு மகிழ்ந்தார். நான் மாடாக நடித்தபோது ஒரு சிறு பருக்கைக் கல்லை எடுத்து என்மேல் போட்டார். அந்த இடத்தை மட்டும் நான் சுழித்துக் காட்டினேன். மாட்டின்மேல் ஈ உட்கார்ந்தால் மாடு அந்த இடத்தைச் சுழிக்கும். ஈ ஓடிவிடும். அந்த நுட்பமான காரியத்தை நான் செய்து காட்டினேன். அதன் அருமையை உணர்ந்து அந்தக் கம்பளியை அளித்தார். நுட்பம் அறிந்து வழங்கியதாதலால் அதைப் பெரிதாகக் கருதுகிறேன். அவர் மன்னராக இருந்திருந்தால் காட்டிலே பாதியையே வழங்கியிருப்பார்” என்று விளக்கினான்.

கலைஞனுடைய உள்ளம், ரசிகர்கள் நுட்பமுணர்ந்து, தரமுணர்ந்து, வரிசையறிந்து பாராட்டும்போது களிக்கிற அளவுக்கு வேறு எந்தச் சமயத்திலும் களிக்காது. பழங்காலப் புலவர் அதனால்தான் ஒரு வள்ளலைப் பார்த்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/134&oldid=1152419" இலிருந்து மீள்விக்கப்பட்டது