பக்கம்:புது டயரி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடந்த கதை

133


மோகனூரிலிருந்து காவிரியின் வடகரை வழியாக வேலூர் சென்று அங்கிருந்து புலிக்கல்பாளையம் என்ற ஊர்போய், அங்கிருந்து காவிரியைக் கடந்து அக்கரையில் உள்ள கொடு முடிக்குப் போவதாகத் திட்டம்.

நாங்கள் புறப்பட்டுவிட்டோம். காலையில் ஏதோ சிறிது உணவுண்டது. பத்து மைல் தூரத்தில் உள்ள வேலூரை அடைந்தோம். பசியாக இருந்தது. அங்கே ஹோட்டலுக்குச் சென்று இட்டிலி உண்டோம். நாங்கள் இருவரும் பிரம்மசாரிகள். எங்களைப் பார்த்த ஹோட்டல்காரர் என்ன கேட்டார் தெரியுமோ?

“நீங்கள் எங்கேயாவது பிராம்மணார்த்தம் சாப்பிடப் போகிறீர்களா?” என்று கேட்டாரே, பார்க்கலாம். பிரம்மசாரிகள் அனேகமாகப் பிராம்மணர்த்ததுக்குப் போகிற வழக்கம் இல்லை. அதைக் கவனிக்காமல் அவர் சொன்னது கிடக்கட்டும். அவர் கேட்டதிலிருந்து ஓர் உண்மை புலப்பட்டது. அந்தக் காலத்திலேயே, பிராம்மணார்த்தம் சாப்பிடப் போகிறவர்களில் சிலர் அந்தக் கடையில் இட்டிலி சாப்பிட்டிருக்க வேண்டும். மேலே வழி நடக்கையில் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டே போனோம்.

சாயங்காலம் ஆறு மணிக்குப் புலிக்கல்பாளையம் போனோம். அங்கிருந்து பாிசலில் கொடுமுடி சென்றோம். அங்கே ஆசார்ய சுவாமிகளை உடனே தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எத்தனையோ பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் சூழ்ந்து கொண்டு உள்ளே விடாமல் தடுத்தார்கள். அப்போது என் இளைய உள்ளம், “பணத்தைச் சட்டை செய்யாமல் இவ்வளவு தூரம் எவ்வளவு ஆர்வத்தோடும் சிரமத்தோடும் கடந்து வந்திருக்கிறோம் இங்கேயும் பணம் அல்லவா வேலியாக நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/140&oldid=1152937" இலிருந்து மீள்விக்கப்பட்டது