பக்கம்:புது டயரி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடந்த கதை

135

 என்னிடம் ஒரு கெட்ட குணம். இராத்திரி எத்தனை நேரமானலும் ஒரேயடியாக விழித்துக்கொண்டு எழுதுவேன்; படிப்பேன். ஆனால் விடியற்காலம் எழுந்திருப்பது என்பது என்னால் முடியவே முடியாது.

அந்தப் பெரியவர்.அவர் என்னைவிட இருபது வயது பெரியவர் — என்னை எழுப்பித் தரதரவென்று இழுத்துச் செல்லாத குறையாக நடக்கச் செய்தார். அவருடன் நடந்தேன். நடையாஅது? அவர் வேகமாக நடப்பார்; நான் அவருடன் ஒடுவேன். “கொஞ்சம் மெதுவாகப் போகலாமே!” என்றால் அவர் கேட்கமாட்டார். “வேகமாகக் கால் வலிக்க வலிக்க நடக்கவேண்டும். அப்போதுதான் உடம்புக்கு நல்லது; தூக்கம் வரும்” என்பார். அவர் உபதேசத்தின் படியே வேகமாகக் காலை எட்டி வைத்து நடந்தேன். முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு பழக்கமாகி விட்டது. ஆனாலும் கால் வலித்தது, சிறிது துாரம் போக வேண்டுமானாலும் ரிக்க்ஷாக்காரனைக் கூப்பிடுகிற எனக்கு வேகமாக இரண்டு மைல் நடப்பதென்றால்? ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடந்தேன். ஏன் தெரியுமா? அந்தப் பெரியவர் சொன்னது உண்மை ஆயிற்று. இரவில் சுகமாகத் தூக்கம் வந்தது. அதனால் அவருடன் நடப்பதை நான் நிறுத்தவில்லை.

ஒரு மாதம் நடந்திருப்பேன். பழையபடி என்னுடைய சோம்பல் என்னிடம் வந்து சேர்ந்தது. ‘விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போலே’ என்று சும்மாவா சொன்னார்கள்? அதை விட மனம் வரவில்லை. வியாதி போனபிறகும் மருந்து சாப்பிடுவார் உண்டா? நானும் தூக்கம் வர ஆரம்பித்த பிறகு நடையை நிறுத்திக் கொண்டேன்.

நாலைந்து வருஷங்களுக்கு முன் இருக்கும். மறுபடியும் நடக்கும் பழக்கத்தைத் தொடங்கினேன். என் மகனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/142&oldid=1152940" இலிருந்து மீள்விக்கப்பட்டது