பக்கம்:புது டயரி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடந்த கதை

137

 இப்படிச் சில வாரங்கள் நடந்தேன். காலையில் பல பெரிய மனிதர்கள் முகத்தில் விழித்து, அவர்களுடைய புன்னகையையும் க்ஷேம விசாரணையையும் பெற்றேன். மழைக்காலம் வந்தது. அப்போது பீச்சுக்குப் போக முடியவில்லை. அந்தக் குளிரில் படுக்கையிலிருந்து எழுவது என்பது சாமான்யமான காரியமா? இந்தச் சுகத்தை விடப் பீச்சில் என்ன சுகம் இருக்கிறது?

மழைக்காலம் எவ்வளவு நாள் இருக்கும்? மழை நின்றது. என் மகனுடைய நண்பர் உலாவப் புறப்பட்டார். நான் மட்டும் வேலை இருக்கிறதென்று சொல்லிப் போவதை நிறுத்தி விட்டேன்.

காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைச் சொல்லத் தெரியவில்லை. நமக்குள்ளே ஏதோ ஒன்று இருந்து நம்மைப் பிடித்து இழுத்து இதைச் செய்யாதே என்கிறது. அப்போது அறிவு எத்தனை சொன்னாலும், அநுபவம் எத்தனை இருந்தாலும், அதன் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தான் இருக்க வேண்டியிருக்கிறது. அதுதான் மனிதனுக்கு என்று அமைந்திருக்கும் சிறப்பான இயல்பு போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/144&oldid=1152943" இலிருந்து மீள்விக்கப்பட்டது