பக்கம்:புது டயரி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கழுத்தில் விழுந்த மாலை

கல்கத்தாவில் பல ஆண்டுகளாகப் பாரதி தமிழ்ச் சங்கம் என்ற சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது. அங்கே நான் பல முறைகள் சென்று பேசியிருக்கிறேன். ஒரு முறை அங்கே நடந்த விழா ஒன்றில் முக்கிய விருந்தினனாகப் போயிருந்தேன். வரவேற்பு ஆனவுடன் ஒரு பெரிய ரோஜா மாலையை எனக்கும் என்னுடன் இருந்த வேறு ஓர் அன்பருக்கும் போட்டார்கள். நான் வழக்கம் போல எனக்குப் போட்ட மாலையைக் கழற்றி வைக்கப் போனேன். அப்போது சங்கத் தலைவர், “ஐயா, அந்த மாலையை அப்படியே சிறிது நேரமாவது போட்டுக் கொண்டிருங்கள்” என்றார், “ஏன்?” என்று கேட்டேன். “இங்கெல்லாம் இதுபோன்ற மாலைகள் கிடைப்பதில்லை. இந்த மாலைகளைத் தனியே சென்னையிலிருந்து வருவித்தோம். விமானத்தில் வந்தன. இவ்வளவு கஷ்டப்பட்டு வருவித்த மாலைகளைக் கொஞ்ச நேரமாவது நீங்கள் அணிந்து பார்க்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. தயை செய்ய வேண்டும்” என்றார். அவருடைய ஆசையைக் கெடுப்பானேன் என்று அரைமணி நேரம் அந்த மாலையை கழற்றாமல் இருந்தேன்.

கோவலன் நாடகத்தில் ஒரு காட்சி. கோவலன் கழுத்தில் மாதவி வீசி எறிந்த மாலையை அவனால் கழற்ற முடியவில்லை. அப்போது, “கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை, காரிகையே இது யார் சூதோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/145&oldid=1153011" இலிருந்து மீள்விக்கப்பட்டது