பக்கம்:புது டயரி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழுத்தில் விழுந்த மாலை

139

 என்று அவன் பாடுவான். அவனைப்போலவே என் கழுத்தில் விழுந்த மாலையை என்னாலும் கழற்ற முடியவில்லை. ஆனால் இங்கே சூது வாது ஏதும் இல்லை. அன்புக்குக் கட்டுப்பட்டுக் கழற்றாமல் இருந்தேன்.

தமிழ்நாட்டில் கட்டும் மாலைகளின் அழகே தனிதான். எத்தனை வகையான மாலைகள்! கோவில் விழாக்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்களே; அந்தக் கைவன்மை வேறு எந்த நாட்டுக் கலைஞர்களிடம் இருக்கிறது; வடக்கே போனால் நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ மணமில்லாத பூவைச் செருகி. மாலையென்று போடுகிறார்கள். தமிழ்நாட்டு மாலை எங்கே, அந்த மாலை எங்கே? இந்த அருமைப்பாட்டை நன்குணர்ந்த பாரதி சங்கத் தலைவர் ஆசைப்பட்டது நியாயமானது தான்.

ஆனால் தமிழ்நாட்டில் சபைகளில் பேசும்போது மாலை போட்டால் உடனே கழற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு கீழே வைத்து விடுவது என் வழக்கம். பல பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ரெயில்வே ஸ்டேஷனில் மாலைகளைக் கழற்றாமல் போட்டுக்கொள்ளும் சில அன்பர்களைப் பார்க்கலாம். வடநாட்டுக்காரர்கள் இங்கே வந்து திரும்புகையில் ஸ்டேஷனில் அவர்களுக்கு மாலை போட்டு அனுப்புவார்கள். அந்த மாலையை அவர்கள் கழற்றாமல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பழங்காலத்தில் ஆடவரும் மகிளிரும் எப்போதுமே மாலைகளை அணிந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இலக்கியங்களில் வருகிற வருணனைகளைப் பார்த்தால் இப்படி எண்ணத் தோன்றுகிறது. அப்போதெல்லாம் ஆடவர்கள் சட்டை அணிவதில்லை. மார்பிலே மாலை அலங்காரமாக இருக்கும். இப்போது நாம் சட்டைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/146&oldid=1153012" இலிருந்து மீள்விக்கப்பட்டது